அமெரிக்காவில் நூற்றுக்கணக்கான மருத்துவமனைகளில் இணைய தாக்குதல்; உளவுத்துறை எச்சரிக்கை

அமெரிக்காவில் நூற்றுக்கணக்கான மருத்துவமனைகளில் சைபர் கிரைக் தாக்குதல் இருப்பதாக உளவுத்துறை எச்சரிக்கை விடுத்து உள்ளது.
அமெரிக்காவில் நூற்றுக்கணக்கான மருத்துவமனைகளில் இணைய தாக்குதல்; உளவுத்துறை எச்சரிக்கை
Published on

போஸ்டன்

அமெரிக்க சுகாதாரத் துறை சிஸ்டத்திற்கு எதிராக சைபர் கிரிமினல்கள் ஒரு பெரிய தாக்குதலை கட்டவிழ்த்து விடுகின்றன என்று அமெரிக்க உளவுத்துறை எச்சரித்து உள்ளன. உளவுத்துறை வல்லுநர்கள் கூறுகையில். ஏற்கனவே இந்த மாதத்தில் குறைந்தது நான்கு அமெரிக்க மருத்துவமனைகளைச் சைபர் தாக்குதல்களை சந்தித்துள்ளது. இதனால் நூற்றுக்கணக்கானவர்கள் பாதிக்கப்பட்டனர்.

,எஃப்.பி.ஐ மற்றும் உளவு அமைப்புகள் கூட்டு அறிக்கையில் அமெரிக்க மருத்துவமனைகள் மற்றும் சுகாதார அதிகாரிகளுக்கு சைபர் கிரைம் அச்சுறுத்தல் பற்றிய நம்பகமான தகவல்கள்" இருப்பதாக எச்சரித்தன. "தீங்கிழைக்கும் மென்பொருட்கள் மூலம் இந்த துறையை தாக்க இலக்கு வைத்துள்ளனர், இது "தரவு திருட்டு மற்றும் சுகாதார சேவைகளை சீர்குலைக்க" வழிவகுக்கும் என்று அவர்கள் கூறி உள்ளனர்.

இந்த தாக்குதல்கள் அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலுடன் ஒத்துப்போகின்றன, ஆனால் அதனுடன் எந்த தொடர்பும் இருப்பதாகத் தெரியவில்லை.

"நாங்கள் அமெரிக்காவில் இதுவரை கண்டிராத மிக முக்கியமான இணைய பாதுகாப்பு அச்சுறுத்தலை நாம் சந்தித்து வருகிறோம்" என்று சைபர் பாதுகாப்பு நிறுவனமான மாண்டியண்டின் தலைமை தொழில்நுட்ப அதிகாரி சார்லஸ் கார்மகல் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

அடுத்த சில வாரங்களில் இந்த குழு நூற்றுக்கணக்கான மருத்துவமனைகளை தாக்கக்கூடும் என்று அவர் கவலைப்படுகிறார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com