இரட்டை என்ஜின் கொண்டது: உலகின் மிகப்பெரிய விமானத்தின் சோதனை ஓட்டம் வெற்றி

இரட்டை என்ஜின் கொண்ட உலகின் மிகப்பெரிய விமானத்தின் சோதனை ஓட்டம் வெற்றிபெற்றது.
இரட்டை என்ஜின் கொண்டது: உலகின் மிகப்பெரிய விமானத்தின் சோதனை ஓட்டம் வெற்றி
Published on

வாஷிங்டன்,

அமெரிக்காவை சேர்ந்த பிரபல விமான தயாரிப்பு நிறுவனமான போயிங் உலகிலேயே மிகப்பெரிய இரட்டை என்ஜின் விமானத்தை தயாரித்துள்ளது. அந்த விமானம் போயிங் 777 எக்ஸ் என்று அழைக்கப்படுகிறது. இந்த விமானத்தின் சோதனை ஓட்டம் மோசமான வானிலை காரணமாக 2 முறை ஒத்திவைக்கப்பட்ட நிலையில் நேற்று முன்தினம் சியாட்டில் நகரில் வெற்றிகரமாக நடந்தது.

அந்த நகரில் உள்ள பெயின் ஓடுதளத்தில் இருந்து புறப்பட்ட விமானம் 4 மணி நேர பயணத்துக்கு பிறகு பத்திரமாக தரையிறங் கியது. இதன் மூலம் போயிங் 777 எக்ஸ் விமானம் முதல் சோதனை ஓட்டத்தை வெற்றிகரமாக நிறைவு செய்தது.

இந்த விமானம் அடுத்த ஆண்டு ஐக்கிய அரபு அமீரகத்தில் தனது சேவையை தொடங்கும் எனவும், அதற்கு முன்னதாக மேலும் பல சோதனைகளுக்கு உட்படுத்தப்படும் என்றும் போயிங் நிறுவனம் தெரிவித்துள்ளது.

கடந்த ஆண்டு போயிங் 737 மேக்ஸ் விமானங்கள் அடுத்தடுத்து விபத்துக்குள்ளானதில் 346 பேர் பலியாகினர். இதனால் போயிங் நிறுவனத்தின் மீதான நம்பகத்தன்மை பெரிதும் குறைந்தது. இதனால் நெருக்கடியை சந்தித்து வந்த அந்த நிறுவனத்துக்கு இந்த சோதனை ஓட்டத்தின் வெற்றி நம்பிக்கை அளிப்பதாக அமைந்துள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com