

வாஷிங்டன்,
அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் டாக்டராக பணியாற்றி வருபவர் வெனிசுலா நாட்டைச் சேர்ந்த ரூபெலிஸ் பொலிவார் (வயது 33). இவரது கணவர் தகவல் தொழில்நுட்ப என்ஜீனியரான மிலென்கோ பாரியா (36) ஆவார். இந்த தம்பதியினர் அமெரிக்காவில் நிரந்தரமாகத் தங்கிவிட அனுமதி கோரி, அதற்காக விண்ணப்பித்து கடந்த 10 ஆண்டுகளாக காத்திருந்தனர்.
அதற்காக தம்பதியினர் கலிபோர்னியாவில் நடக்கும் முக்கிய நேர்காணலில் பங்கேற்கத் தனது மகளுடன் சென்றனர். அப்போது அவர்கள் விமான நிலையத்தில் எல்லைப் பாதுகாப்புப் படை யினரால் கைது செய்யப்பட்டனர். பின்னர். ரூபெலிஸைச் சிறையிலடைத்த அதிகாரிகள், அவரது 5 வயது மகளை மட்டும் தந்தையுடன் அனுப்பினர்.
மனைவியின்றி நேர்காணலில் பங்கேற்ற கணவர் மிலென்கோ, "10 ஆண்டு கனவு சிதைந்துவிட்டது" எனத் துயரத்துடன் தெரிவித்தார். செல்லுபடியாகும் ஆவணங்கள் இருந்தும் டிரம்ப் அரசின் கடும் சட்டங்களால் டாக்டர் கைது செய்யப்பட்டிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.