

நிகோசியா,
மத்திய தரைக்கடல் பகுதியில் அமைந்துள்ள தீவு நாடு சைப்ரஸ். இந்நாட்டின் தெற்கு பகுதியை துருக்கி ஆக்கிரமித்துள்ளது
இதனிடையே, துருக்கி ஆக்கிரமிப்பில் உள்ள வடக்கு சைப்ரசில் உள்ள கைரேனியா நகரில் இருந்து துருக்கியின் தாசுகு நகருக்கு இன்று பயணிகள் படகு புறப்பட்டது. அந்த படகில் 270 பேர் பயணித்தனர்.
கைரேனியாவில் இருந்து 5 கிலோ மீட்டர் தொலைவில் நடுக்கடலில் சென்றுகொண்டிருந்த படகு திடீரென கடலில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்து படகில் இருந்த பயணிகள் கடலில் விழுந்தனர்.
இந்த விபத்து குறித்து தகவலறிந்த மீட்புக்குழுவினர் விரைந்து சென்று கடலில் தத்தளித்தவர்களை மீட்டனர். அதேவேளை இந்த படகு விபத்தில் உயிரிழப்பு சம்பவங்கள் ஏதும் ஏற்பட்டதா? என்பது குறித்த தகவல் இதுவரை வெளியாகவில்லை.