இங்கிலாந்து ராணியின் மனம் கவர்ந்த ‘கோர்கி’ நாய்களை கொண்டாடும் விழா - லிதுவேனியாவில் கோலாகலம்


இங்கிலாந்து ராணியின் மனம் கவர்ந்த ‘கோர்கி’ நாய்களை கொண்டாடும் விழா - லிதுவேனியாவில் கோலாகலம்
x

விழாவில் நாய்களுக்கான பிரத்யேக ஓட்டப்பந்தயம் மற்றும் பேஷன் ஷோ நடைபெற்றது.

வில்னியஸ்,

மறைந்த இங்கிலாந்து ராணி 2-ம் எலிசபெத், தனது சிறுவயது முதலே ‘கோர்கி’ இனத்தை சேர்ந்த நாய்களை விரும்பி வளர்த்து வந்தார். சிறிய கால்களுடன் குள்ளமாக காட்சியளிக்கும் இந்த நாய் காண்போரை எளிதில் கவரக்கூடியது. ராணி எலிசபெத் சுமார் 30 ‘கோர்கி’ நாய்களை வளர்த்து வந்தார் என்று கூறப்படுகிறது.

இந்நிலையில், ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான லிதுவேனியாவில் ‘கோர்கி’ நாய்களை கொண்டாடும் விதமாக நாய்களுக்கான பிரத்யேக விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இந்த விழாவில் நாய்களுக்கான ஓட்டப்பந்தயம் மற்றும் பேஷன் ஷோ நடைபெற்றது. குறிப்பாக நாய்களுக்கு அதன் உரிமையாளர்கள் பல்வேறு விதமான அலங்காரங்களை செய்து அழைத்து வந்திருந்தனர். பேஷன் ஷோவில் நாய்கள் ஸ்டைலாக வலம் வந்தது காண்போரை வெகுவாக கவர்ந்தது.

1 More update

Next Story