பாகிஸ்தானில் ரசாயன தொழிற்சாலையில் தீ விபத்து; 16 பேர் உயிரிழப்பு

பாகிஸ்தானின் கராச்சி நகரில் ரசாயன தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் 16 பேர் உயிரிழந்து உள்ளனர்.
பாகிஸ்தானில் ரசாயன தொழிற்சாலையில் தீ விபத்து; 16 பேர் உயிரிழப்பு
Published on

கராச்சி,

பாகிஸ்தானின் கராச்சி நகரில் ரசாயன தொழிற்சாலை ஒன்று அமைந்துள்ளது. அதில், திடீரென தீ விபத்து ஏற்பட்டு உள்ளது. இந்த சம்பவத்தில் சிக்கிய 16 உடல்கள் மீட்கப்பட்டு உள்ளன.

அவர்களில் 12 பேர் அடையாளம் காணப்பட்டு உள்ளனர். உடல்களை உறவினர்கள் வாங்கி சென்றனர். 4 பேரின் உடல்களை உடனடியாக அடையாளம் காணமுடியவில்லை. இந்த தீ விபத்தில் சிக்கி உயிரிழந்த அனைவரும் 18 முதல் 38 வயதுக்கு உட்பட்டவர்கள் ஆவர். இதுபற்றி போலீசாரின் விசாரணை நடந்து வருகிறது.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com