பிரேசிலில் கொரோனா மருத்துவமனையில் தீ விபத்து: 4 பேர் உயிரிழப்பு

பிரேசில் நாட்டில் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 4 பேர் உயிரிழந்தனர்.
பிரேசிலில் கொரோனா மருத்துவமனையில் தீ விபத்து: 4 பேர் உயிரிழப்பு
Published on

பிரேசிலியா,

பிரேசில் நாட்டில் 1.63 கோடி பேருக்கு கொரோனா பாதிப்புகள் ஏற்பட்டு உள்ளன. உலக அளவிலான மொத்த உயிரிழப்பு எண்ணிக்கையில் அமெரிக்காவுக்கு அடுத்த இடத்தில் பிரேசில் உள்ளது.

அந்நாட்டில் இதுவரை 4 லட்சத்து 59 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்து உள்ளனர். இந்த நிலையில், அந்நாட்டின் கிழக்கே செர்கிபே மாநிலத்தில் அரகாஜு என்ற நகரில் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்காக நெஸ்டர் பைவா என்ற மருத்துவமனை ஒன்று செயல்பட்டு வருகிறது.

இதில், திடீரென நேற்று தீப்பிடித்து கொண்டது. இந்த துயர சம்பவத்தில் பலர் சிக்கி கொண்டனர். அவர்களில் 77 வயது மூதாட்டி உள்பட 4 பேர் உயிரிழந்து உள்ளனர். சம்பவம் நடந்தபோது, மருத்துவமனையில் 60 நோயாளிகள் இருந்து உள்ளனர். தீ விபத்து ஏற்பட்டதற்கான காரணம் தெரியவரவில்லை.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com