இத்தாலியில் பயங்கர காட்டுத்தீ: 24 பேர் படுகாயம்

ஐரோப்பாவில் அமைந்துள்ள நாடு இத்தாலி.
 இத்தாலியில் பயங்கர காட்டுத்தீ: 24 பேர் படுகாயம்
Published on: 

ரோம்,

இத்தாலியில் ஏற்பட்ட பயங்கர காட்டுத்தீயில் சிக்கி 24 பேர் படுகாயமடைந்தனர்.

ஐரோப்பாவில் அமைந்துள்ள நாடு இத்தாலி. இந்நாட்டின் வெனடோ மாகாணத்தில் புகழ்பெற்ற கார்டா ஏரி உள்ளது. இந்த ஏரியை சுற்றியும் வனப்பகுதி உள்ளது. இந்த வனப்பகுதியில் சுற்றுலா பயணிகள், உள்ளூர் மக்கள் முகாம் அமைத்து தங்கி இயற்கை அழகை கண்டு ரசித்து வருகின்றனர்.

காட்டுத்தீ - 24 பேர் படுகாயம்

இந்நிலையில், அம்மாகாணத்தில் கார்டா ஏரி அருகே பெச்சிரா டெல் கார்டா என்ற பகுதியில் உள்ள வனப்பகுதியில் இன்று பயங்கர காட்டுத்தீ ஏற்பட்டது. இந்த காட்டுத்தீயில் அப்பகுதியில் சுற்றுலாவுக்காக முகாம் அமைத்திருந்த பலர் சிக்கிக்கொண்டனர். இந்த காட்டுத்தீயில் சிக்கி 24 பேர் படுகாயமடைந்தனர்.

தகவலறிந்து விரைந்து சென்ற தீயணைப்புத்துறையினர் பற்றி எரியும் காட்டுத்தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். அதேவேளை, காயமடைந்த 24 பேரும் மீட்கப்பட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com