

அசே,
இந்தோனேஷியாவின் மேற்கே அமைந்த அசே மாகாணத்தில் எண்ணெய் கிணறு ஒன்று அமைந்துள்ளது. இங்கு ஏற்பட்ட தீ விபத்தில் 10 பேர் பலியாகி உள்ளனர். எண்ணற்றோர் காயமடைந்து உள்ளனர்.
இந்த நிலையில் அந்நாட்டின் பேரிடர் கழகம் இன்று வெளியிட்டுள்ள செய்தியில், குழாய்களை வெல்டிங் செய்யும்பொழுது இந்த தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளது.
எண்ணெய் கிணறில் சட்டவிரோத முறையில் துளையிட்டதனால் 5 பேர் கொல்லப்பட்டனர் என்றும் 12க்கும் மேற்பட்டோர் காயமடைந்து உள்ளனர் என்றும் அன்டாரா அரசு கழகம் இதற்கு முன் வெளியிட்ட தகவலில் தெரிவித்து உள்ளது.