வாசனை திரவ சேமிப்பு கிடங்கில் பயங்கர தீ விபத்து - 6 பேர் பலி

தீ விபத்தில் 5 பேர் படுகாயமடைந்தனர்
வாசனை திரவ சேமிப்பு கிடங்கில் பயங்கர தீ விபத்து - 6 பேர் பலி
Published on

அங்காரா,

துருக்கி நாட்டின் கொஹலி மாகாணம் டிலோவசி நகரில் வாசனை திரவ சேமிப்பு கிடங்கு (Perfume Warehouse) உள்ளது. இங்கிருந்து நகரின் பல்வேறு பகுதிகளில் உள்ள வணிக வளாகங்களுக்கு வாசனை திரவம் விநியோகம் செய்யப்படுகிறது.

இந்நிலையில், வாசனை திரவ சேமிப்பு கிடங்களில் நேற்று காலை பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீ விபத்தில் சேமிப்பு கிடங்கில் வேலை செய்துகொண்டிருந்த 6 பேர் உயிரிழந்தனர். மேலும், 5 பேர் படுகாயமடைந்தனர்.

தகவலறிந்து விரைந்து சென்ற தீயணைப்புத்துறையினர், சேமிப்பு கிடங்கில் பற்றி எரிந்த தீயை பல மணி நேரம் போராடி அணைத்தனர். மேலும், காயமடைந்த 5 பேரை மீட்டு சிகிச்சைக்காக அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். இந்த தீ விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.   

X

Daily Thanthi
www.dailythanthi.com