அமெரிக்காவில் ரசாயன தொழிற்சாலையில் பெரும் தீ விபத்து! வீடுகளை விட்டு உடனடியாக வெளியேற பொதுமக்களுக்கு உத்தரவு

அந்த ரசாயன ஆலைக்குள் புரோபேன் வேதிப்பொருள் தொட்டிகள் மற்றும் பிற எரியக்கூடிய இரசாயனங்கள் இருப்பதால், தீயணைப்பு வீரர்கள் உடனடியாக பின்வாங்கினர்.
அமெரிக்காவில் ரசாயன தொழிற்சாலையில் பெரும் தீ விபத்து! வீடுகளை விட்டு உடனடியாக வெளியேற பொதுமக்களுக்கு உத்தரவு
Published on

வாஷிங்டன்,

அமெரிக்காவின் நெப்ராஸ்காவில் உள்ள ஒமாஹா நகரத்தில் செயல்பட்டு வருன் ஒரு ரசாயன தொழிற்சாலையில் பெரும் தீ விபத்து ஏற்பட்டது.

இதனால் யாரும் தங்கள் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், அப்பகுதி குடிமக்கள் தங்கள் வீடுகளை காலி செய்யும்படி அதிகாரிகளால் வலியுறுத்தப்பட்டது.

நேற்று இரவு முதல் பரவத் தொடங்கிய தீ, தீவிரமான பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. கடுமையான தீ விபத்து என்பதால், மூன்று அலாரம் தீ விபத்து என இந்த தீ விபத்து வகைப்படுத்தப்பட்டுள்ளது.

எனினும், இந்த தீ விபத்துக்கான காரணம் இதுவரை தெரியவில்லை. அந்த ரசாயன ஆலைக்குள் புரோபேன் வேதிப்பொருள் தொட்டிகள் மற்றும் பிற எரியக்கூடிய இரசாயனங்கள் இருப்பதால், தீயணைப்பு வீரர்கள் உடனடியாக பின்வாங்கினர். இதன் காரணமாக தீயணைக்கும் பணி இன்னும் தொடருகிறது.

நாக்ஸ்-கிரீட் என்ற ரசாயன தொழிற்சாலை கான்கிரீட் வேலைக்கு உதவும் இரசாயன பொருட்களை உற்பத்தி செய்து வரும் ஆலை ஆகும்.ரசாயன ஆலையில் இருந்து எழும் புகையால் யாருக்கும் பெரிய அளவில் உடல் உபாதை ஏற்படவில்லை.

அடர்த்தியான கரும்புகை மற்றும் கடுமையான தீப்பிழம்புகள் சில மைல்களுக்கு அப்பால் வரை காணப்பட்டன. இதனை நூற்றுக்கணக்கான மக்கள் கூரைகள், தாழ்வாரங்கள் மற்றும் நடைபாதைகளில் கூடி நின்று கண்டு வருகின்றனர்.  

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com