இந்தோனேசியா வனப்பகுதிகளில் தீ - விமான போக்குவரத்து கடுமையாக பாதிப்பு

இந்தோனேசியா வனப்பகுதிகளில் ஏற்பட்ட தீயினால் வானில் கரும்புகை காணப்படுகிறது. இதனால் அந்நாட்டில் விமான போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
இந்தோனேசியா வனப்பகுதிகளில் தீ - விமான போக்குவரத்து கடுமையாக பாதிப்பு
Published on


* வடகொரியா தலைவர் கிம் ஜாங் அன்னை இந்த ஆண்டின் இறுதிக்குள் ஏதேனும் ஒரு தருணத்தில் நேரில் சந்தித்து பேசுவேன் என அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் தெரிவித்துள்ளார்.

* இந்தோனேசியா வனப்பகுதிகளில் தீப்பற்றி எரிவதால் வானில் கரும்புகை சூழ்ந்து காணப்படுகிறது. இதன்காரணமாக அந்நாட்டில் விமான போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

* பிரான்சில் அதிபர் மேக்ரான் தலைமையிலான அரசு, பல்வேறு வகையான ஓய்வூதிய திட்டங்களை ஒன்றாக இணைக்க திட்டமிட்டுள்ளது. இதனால் தங்களது ஓய்வூதிய திட்ட சலுகைகள் குறையும் என்று குற்றம்சாட்டி, நாடு முழுவதும் மெட்ரோ ரெயில் ஊழியர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் பயணிகள் கடும் அவதிக்குள்ளாகினர்.

* ஐ.நா.வின் 74-வது பொதுசபை கூட்டம், அமெரிக்காவின் நியூயார்க் நகரில் வருகிற 21-ந்தேதி தொடங்கி 30-ந்தேதி வரை நடைபெறுகிறது. இதில் உலக நாடுகளின் தலைவர்கள் கலந்துகொள்ள இருக்கும் நிலையில் தான் இந்த பொதுக்கூட்டத்தில் பங்கேற்கப்போவதில்லை என வெனிசுலா அதிபர் நிகோலஸ் மதுரோ தெரிவித்துள்ளார்.

* ஈரான் தலைவர்கள் தன்னை சந்திக்க விரும்புகிறார்கள் என்றும் நியூயார்க்கில் நடைபெறும் ஐ.நா பொதுசபை கூட்டத்தின் இடையே ஈரானுடன் பேச்சுவார்த்தை நடத்த முயற்சிப்பேன் என்றும் அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com