கலிபோர்னியாவில் வேகமாக பரவி வரும் காட்டுத்தீ

கலிபோர்னியாவில் வேகமாக பரவி வரும் காட்டுத்தீயை அணைக்க தீயணைப்பு வீரர்கள் போராடி வருகின்றனர்.
கலிபோர்னியாவில் வேகமாக பரவி வரும் காட்டுத்தீ
Published on

கலிபோர்னியா,

அமெரிக்காவின் கலிபோர்னியாவின் சியரா நெவாடா மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் வேகமாக காட்டுத்தீ வேகமாக பரவி வருகிறது. இதனை கட்டுப்படுத்த தீயணைப்புவீரர்கள் போராடி வருகின்றனர்.

கடந்தவாரம் பல வீடுகளை சாம்பலாக்கிவிட்டு தனது பரப்பினை அதிகரித்துக்கொண்டே செல்லும் காட்டுத்தீயை கட்டுப்படுத்த 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டு உள்ளனர்.

11 சதுர மைல்கள் பரவியிருந்த காட்டுத்தீயானது 24 மணி நேரத்தில் 133 சதுர மைல்களுக்கும் மேல் ஆக்கிரமித்துக்கொண்டது என்று சீக்வோயா தேசிய வன அறிக்கை கூறுகிறது.

சுமார் 2,000 குடியிருப்புகள் மற்றும் 100 வணிக வளாகங்கள் காட்டுத்தீயினால் பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இரண்டு வணிக கட்டிடங்கள் முழுவதுமாக தீயில் சேதமடைந்தன. அப்பகுதியில் வசிக்கும் மக்கள் அனைவரும் பாதுகாப்பான இடத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

இந்த காட்டுத்தீயானது கலிபோர்னியாவில் மட்டும் மில்லியன் கணக்கான மரங்களைக் அழித்தது. கடந்த 30 ஆண்டுகளில் காலநிலை மாற்றம் மேற்கத்திய நாடுகளை மிகவும் வெப்பமாகவும் வறண்டதாகவும் ஆக்கியுள்ளது. இந்த வானிலை மாற்றத்தால் இந்த மாதிரியான காட்டுத்தீயானது அடிக்கடி நிகழும் என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com