பாகிஸ்தானில் இறுதி ஊர்வலத்தில் துப்பாக்கி சூடு; 8 பேர் பலி

பாகிஸ்தானின் கைபர் பக்துன்குவா மாகாணத்தில் இறுதி ஊர்வலத்தில் நடந்த துப்பாக்கி சூட்டில் 8 பேர் கொல்லப்பட்டு உள்ளனர்.
பாகிஸ்தானில் இறுதி ஊர்வலத்தில் துப்பாக்கி சூடு; 8 பேர் பலி
Published on

கைபர் பக்துன்குவா,

பாகிஸ்தானின் கைபர் பக்துன்குவா மாகாணத்தில் லோயர் தீர் மாவட்டத்தில் இறுதி ஊர்வலம் ஒன்று நடந்தது. இதில், திடீரென துப்பாக்கி சூடு நடத்தப்பட்டது.

இந்த சம்பவத்தில் 8 பேர் கொல்லப்பட்டு உள்ளனர். 15 பேர் காயமடைந்து உள்ளனர். அவர்கள் அருகிலுள்ள மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டனர். அவர்களில் 10 பேரின் நிலைமை கவலைக்குரிய வகையில் உள்ளது.

இரு குழுக்களுக்கு இடையே ஏற்பட்ட நில தகராறில் இந்த துப்பாக்கி சூடு நடத்தப்பட்டு உள்ளது என கூறப்படுகிறது.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com