இங்கிலாந்தில் உளவு அமைப்புக்கு முதல்முறையாக பெண் தலைவர் நியமனம்


இங்கிலாந்தில் உளவு அமைப்புக்கு முதல்முறையாக பெண் தலைவர் நியமனம்
x

முக்கியத்துவம் வாய்ந்த இந்த உளவுப்பிரிவுக்கு பெண் ஒருவர் தலைவராக பொறுப்பேற்பது இதுவே முதன்முறை ஆகும்.

லண்டன்,

இங்கிலாந்தில் பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் தலைமையிலான ஆட்சி நடைபெற்று வருகிறது. சமீப காலமாக இங்கிலாந்துக்கு அதிகளவில் அச்சுறுத்தல் ஏற்படுகிறது. இதனை கண்காணிக்க நாட்டின் உளவுத்துறையை மேலும் பலப்படுத்த வேண்டிய கட்டாயத்தில் அரசாங்கம் உள்ளது.

இந்தநிலையில், இங்கிலாந்தில் எம்-16 என்ற உளவுப்பிரிவு தலைவராக பிளேஸ் மெட்ரெவேலி நியமிக்கப்பட்டு உள்ளார். முக்கியத்துவம் வாய்ந்த இந்த உளவுப்பிரிவுக்கு 116 ஆண்டுகால வரலாற்றில் பெண் ஒருவர் தலைவராக பொறுப்பேற்பது இதுவே முதன்முறை ஆகும். நாட்டின் பாதுகாப்பு அச்சுறுத்தல் குறித்து வெளியுறவுத்துறை மந்திரியிடம் பிளேஸ் மெட்ரெவேலி நேரடியாக அறிக்கை சமர்ப்பிப்பார்.

லண்டனில் உள்ள கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் பயின்ற அவர் 1999-ம் ஆண்டு புலனாய்வுத்துறை அதிகாரியாக பொறுப்பேற்றது குறிப்பிடத்தக்கது.

1 More update

Next Story