துருக்கியில் டீக்கடையில் துப்பாக்கிச்சூடு - 5 பேர் உயிரிழப்பு

துருக்கியில் டீக்கடையில் ஒரு தரப்பினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 5 பேர் உயிரிழந்தனர்.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

அங்காரா,

துருக்கி நாட்டின் இஸ்மிர் மாகாணம் மென்டெரெஸ் பகுதியில் உள்ள டீக்கடையில் சிலர் டீ குடித்து கொண்டிருந்தனர். அப்போது அங்கு நின்ற இரு தரப்பினர் கடன் கொடுக்கல் வாங்கல் குறித்து பேசிக் கொண்டிருந்தனர். இதில் அவர்களுக்கிடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

தகராறு முற்றியதில் ஆத்திரம் அடைந்த ஒரு தரப்பினர் திடீரென துப்பாக்கியை எடுத்து சுட ஆரம்பித்தனர். இதனால் அங்கிருந்தவர்கள் பயத்தில் நாலாபுறமும் சிதறி ஓடினர். இந்த துப்பாக்கிச்சூட்டில் 5 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் 2 பேர் படுகாயம் அடைந்தனர்.

இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com