

போர்ட் மோரஸ்பி,
பப்புவா நியூ கினியா நாட்டின் கிழக்குப் பகுதியில் அமைந்துள்ள செபிக் மாகாணத்தில் பழங்குடியினத்தைச் சேர்ந்த இரு பிரிவினரிடையே ஏற்பட்ட மோதலில் 5 பேர் கொல்லப்பட்டனர். மேலும் பலர் படுகாயமடைந்தனர். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக, 2 பேர் பிணைக் கைதிகளாக பிடிக்கப்பட்டனர்.
முன்னதாக பப்புவா நியூ கினியாவின் தொலைதூரப் பகுதிகளில் போதுமான அளவில் போலீசார் பணியில் ஈடுபடுத்தப்படுவதில்லை. இதனால் மோதலின் தீவிரம் மற்றும் உயிர்ச்சேதத்தை தடுக்க எந்த போலீஸ் அதிகாரியும் கலந்து கொள்ளவில்லை.
பப்புவா நியூ கினியாவில் பழங்குடி வன்முறை ஒரு பொதுவான நிகழ்வு. கடந்த ஏப்ரல் 2021 இல், பழங்குடியினருக்கு இடையிலான சண்டையில் 19 பேர் கொல்லப்பட்டனர். நாட்டில் துப்பாக்கிகளின் வருகை பழங்குடி மோதல்களை அதிகரித்து வருகிறது. இதனால் ஒவ்வொரு ஆண்டும் டஜன் கணக்கான இறப்புகள் மற்றும் ஆயிரக்கணக்கான இடப்பெயர்வுகளை ஏற்படுத்துகிறது.