ரஷ்யாவில் சர்ச் ஒன்றில் துப்பாக்கி சூடு: 5 பேர் பலி; 5 பேர் காயம்

ரஷ்யாவில் சர்ச்சில் வழிபட்டு விட்டு வெளியே வந்தவர்களை நோக்கி மர்ம நபர் சுட்டதில் 5 பேர் பலியாகினர். #Tamilnews
ரஷ்யாவில் சர்ச் ஒன்றில் துப்பாக்கி சூடு: 5 பேர் பலி; 5 பேர் காயம்
Published on

மாஸ்கோ,

ரஷ்யாவில் முஸ்லிம்கள் அதிகம் வசிக்கும் டகேஸ்டான் பகுதியில் கிஜ்லியார் கிராமத்தில் சர்ச் ஒன்றில் வழிபட்டு விட்டு பொதுமக்கள் வெளியே வந்து கொண்டு இருந்துள்ளனர்.

அவர்களை நோக்கி நபர் ஒருவர் துப்பாக்கியால் சுட்டுள்ளார். இந்த சம்பவத்தில் 5 பேர் பலியாகினர். 5 பேர் காயமடைந்து உள்ளனர். இதற்கு ஐ.எஸ். அமைப்பு பொறுப்பேற்று உள்ளது என ஊடக தகவல் தெரிவிக்கின்றது.

இந்த தாக்குதலில் ஈடுபட்ட 22 வயது நபர் அருகில் பாதுகாப்பு பணியில் இருந்த காவலர்களால் சுட்டு கொல்லப்பட்டார். அவரிடம் இருந்து வேட்டை துப்பாக்கி, துப்பாக்கி குண்டுகள் மற்றும் கத்தி ஒன்றும் கைப்பற்றப்பட்டது.

இந்த சம்பவத்தில் காயமடைந்தவர்களில் உள்ளூர் பாதுகாப்பு பணியாளர்கள் பெண்கள் மற்றும் பொதுமக்கள் அடங்குவர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com