

ஏதேன்ஸ்,
கிரீஸ் நாட்டில் அடுக்குமாடி கட்டிடத்தில் ஏற்பட்ட வெடி விபத்தில் 5 பேர் பலியாகிருக்கலாம் என்ற அச்சம் எழுந்துள்ளது.
ஐரோப்பாவில் அமைந்துள்ள நாடு கிரீஸ். இந்நாட்டின் தலைநகர் ஏதேன்ஸ் அருகே பாலக் மாவட்டத்தில் 2 மாடிகளை கொண்ட அடுக்குமாடி குடியிருப்பு உள்ளது. இந்த அடுக்குமாடி குடியிருப்பில் இன்று காலை பயங்கர வெடிவிபத்து ஏற்பட்டது.
இந்த வெடி விபத்தில் கட்டிடம் இடிந்து தரைமட்டம் ஆனது. இந்த வெடி விபத்தில் 5 பேர் பலியானதாக முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது. அதேவேளை, 3 பேர் காயமடைந்த நிலையில் அவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் மீட்புக்குழுவினர் அனுமதித்தனர்.
கியாஸ் சிலிண்டர் வாயு கசிவால் இந்த வெடி விபத்து ஏற்பட்டதாக முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது. அதேவேளை, இந்த வெடி விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.