தஜிகிஸ்தான் எல்லையில் துப்பாக்கி சூடு - 5 பேர் பலி

ஆப்கானிஸ்தான் - தஜிகிஸ்தான் எல்லையில் பதற்றமான சூழ்நிலை உருவாகியுள்ளது.
துசான்பே,
தஜிகிஸ்தான் நாட்டின் எல்லையில் ஆப்கானிஸ்தான் அமைந்துள்ளது. இந்நிலையில், ஆப்கானிஸ்தானில் இருந்து எல்லை வழியாக தஜிகிஸ்தானுக்குள் நேற்று சிலர் அத்துமீறி நுழைய முயற்சித்துள்ளனர். தஜிகிஸ்தானின் ஷோகின் மாவட்டம் கவோ கிராம எல்லை வழியாக நுழைய முயன்றுள்ளனர். அப்போது எல்லையில் பாதுகாப்புப்பணியில் இருந்த பாதுகாப்புப்படை வீரர்கள் அந்த கும்பலை தடுக்க முயன்றுள்ளனர்.
அப்போது அந்த கும்பல் துப்பாக்கி சூடு நடத்தியது. இந்த துப்பாக்கி சூட்டில் பாதுகாப்புப்படையினர் 2 பேர் உயிரிழந்தனர். இதனை தொடர்ந்து பாதுகாப்புப்படையினர் நடத்திய பதிலடி துப்பாக்கி சூட்டில் 3 பேர் உயிரிழந்தனர். இரு தரப்புக்கும் இடையே நடந்த மோதலில் 5 பேர் உயிரிழந்தனர். இந்த மோதலால் ஆப்கானிஸ்தான் - தஜிகிஸ்தான் எல்லையில் பதற்றமான சூழ்நிலை உருவாகியுள்ளது.
Related Tags :
Next Story






