பயணிகள் விமானம் அருகே பறந்த அமெரிக்க போர் விமானம்; அக்கிரமத்தின் உச்சம் -ஈரான் கண்டனம்

அமெரிக்க போர் விமானம் ஈரான் விமானத்தின் அருகில் பறந்தது சட்டவிரோதமானது என்று ஈரான் கடுமையாக குற்றம்சாட்டியுள்ளது.
பயணிகள் விமானம் அருகே பறந்த அமெரிக்க போர் விமானம்; அக்கிரமத்தின் உச்சம் -ஈரான் கண்டனம்
Published on

தெஹ்ரான்

ஈரான் நாட்டின் தலைநகர் தெஹ்ரானில் இருந்து நேற்று முன்தினம் துருக்கி பெய்ரூட்டிற்கு மஹன் பயணிகள் விமானம் சென்று கொண்டிருந்தது. சிரியா எல்லையில் திடீரென அமெரிக்க போர் விமானம் மிக அருகில் இடைமறிப்பது போன்று வந்தது.

நொடிப்பொழுதில் சுதாரித்துக் கொண்ட விமானி விமானத்தின் உயரத்தை சட்டென்று குறைத்தார். இதனால் சில விமான பயணிகள் காயம் அடைந்தனர். பின்னர் விமானம் பாதுகாப்பாக தரையிறங்கியது.

இதனிடையே, போர் விமானம் அருகில் சென்றது உண்மைதான். ஆனால் 1000 மீட்டர் இடைவெளி இருந்தது என்று அமெரிக்கா தெரிவித்துள்ளது. ஆனால் 100 மீட்டர் இடைவெளி மட்டுமே இருந்தது என ஈரான் தெரிவித்துள்ளது.

இந்நிலையில் அமெரிக்கா விமானம் அருகில் பறந்தது சட்ட விரோதம் என்று ஈரான் குற்றம்சாட்டியுள்ளது. ஈரான் வெளியுறவுத்துறை அமைச்சர் முகமது ஜாவத் ஜரிஃப் கூறுகையில், இந்த நடவடிக்கை அக்கிரமத்தின் உச்சம். அப்பாவி பொதுமக்கள், பயணிகளுக்கு ஆபத்தை விளைவிக்கும் வகையில் விமான சேவையை மிரட்டித் துன்புறுத்த திட்டமிடுகிறது என்று தெரிவித்துள்ளார்.

போக்குவரத்துத்துறை அமைச்சர் கூறுகையில், இது ஒரு பயங்கரவாத நடவடிக்கை, இதுகுறித்து நாங்கள் சர்வதேச பொது விமான போக்குவரத்து அமைப்பிடம் புகார் அளிப்போம். இது அமெரிக்க அரசாங்கத்தின் பயங்கரவாதச் செயலைக் கண்டிக்க வழிவகுக்கும் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம் என்றார்.

ஈரானின் அதிகாரபூர்வ செய்தி நிறுவனமான ஐ.ஆர்.என்.ஏ ஐ.நா.பாதுகாப்புக் குழு (யு.என்.எஸ்.சி) மற்றும் பொதுச்செயலாளருக்கு "மஹன் விமான பயணிகள் விமானத்திற்கு அச்சுறுத்தல்" தொடர்பாக ஒரு எதிர்ப்பு கடிதம் சமர்ப்பிக்கப்படும் என்று கூறி உள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com