அமெரிக்காவில் 2-வது நாளாக விமான சேவைகள் பாதிப்பு: பயணிகள் கடும் அவதி

பழைய விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டு அமைப்புகளில் புதிய தொழில்நுட்பங்களை இணைக்கும் பணி நடந்தது. அப்போது பழைய உபகரணங்களில் அதிகப்படியான அழுத்தம் ஏற்பட்டு, கட்டுப் பாட்டு அறைக்கும், விமானிகளுக்கும் இடையிலான தகவல் தொடர்பு மற்றும் ரேடார் சிக்னல்கள் துண்டிக்கப்பட்டன.
அமெரிக்காவில் 2-வது நாளாக விமான சேவைகள் பாதிப்பு: பயணிகள் கடும் அவதி
Published on: 

அமெரிக்க விமானப் போக்குவரத்து நிர்வாகத்தின் பழைய செப்பு கம்பிகள் மற்றும் ரேடார் அமைப்புகளை மாற்றி நவீனப்படுத்தும் பணிகள் கடந்த ஆண்டு முதல் நடைபெற்று வருகின்றன. இதற்காக நாடாளுமன்றம் சுமார் ரூ.1.18 லட்சம் கோடி (12.5 பில்லியன் டாலர்) நிதி ஒதுக்கியுள்ள நிலையில், பணிகளை முழுமையாக முடிக்க மேலும் ரூ.2.83 லட்சம் கோடி (30 பில்லியன் டாலர்) நிதியை வெள்ளை மாளிகை கோரி வருகிறது.

விமான சேவை முடக்கம்

இந்த நிலையில், பழைய விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டு அமைப்புகளில் புதிய தொழில்நுட்பங்களை இணைக்கும் பணி நடந்தது. அப்போது பழைய உபகரணங்களில் அதிகப்படியான அழுத்தம் ஏற்பட்டு, கட்டுப் பாட்டு அறைக்கும், விமானிகளுக்கும் இடையிலான தகவல் தொடர்பு மற்றும் ரேடார் சிக்னல்கள் துண்டிக்கப்பட்டன. இதனால் நடுவானில் பறக்கும் விமானங் களுடன் தொடர்பு கொள்வதில் ஆபத்து ஏற்படும் என்பதால், பாதுகாப்பு கருதி சுமார் 4 மணி நேரத்துக்கும் மேலாக நாடு முழுவதும் எந்தவொரு விமானமும்சுமார் 11 ஆயிரம் விமானங்கள் பாதிக்கப்பட்டன.

பயணிகள் தவிப்பு

எனினும், வானில் பறந்து கொண்டிருந்த 3,000-க்கும் மேற்பட்ட விமானங்கள் பாதுகாப்பாகத் தரையிறக்கப்பட்டதால் யாருக்கும் எந்த ஆபத்தும் ஏற்படவில்லை என உள்நாட்டுப் பாதுகாப்புச் செயலாளர் மார்க்வெய்ன் முல்லின் தெரிவித்தார் தொழில்நுட்பக் கோளாறு சரி செய்யப்பட்டு உள்ளூர் நேரப்படி இரவு 8.15 மணிக்குப் பிறகு தடை நீக்கப்பட்டாலும், அதன் தாக்கம் தொடர்ந்து நீடிக்கிறது. விமான கண்காணிப்பு இணையதளம் வெளியிட்ட தகவலின்படி, அமெரிக்காவில் 6,150-க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. 7,300-க்கும் மேற்பட்ட விமானங்கள் தாமதமாக இயக்கப்பட்டன. இதனால் விமான நிலையங்களில் ஆயிரக்கணக்கான பயணிகள் தவித்து வருகின்றனர். விமானங்கள், விமானிகள் மற்றும் ஊழியர்களை மீண்டும் உரிய இடங்களுக்கு அனுப்பி வழக்கமான சேவையைத் தொடங்குவதில் விமான நிறுவனங்களுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.

இரவு வரை பாதிப்பு நீடிக்கும்

அமெரிக்க விமானப் போக்குவரத்து நிர்வாகத் தலைவர் பிரையன் பெட்ஃபோர்டு கூறுகையில், விமான சேவைகள் ஞாயிற்றுக்கிழமை இரவு வரையில்தான் முழுமையாக இயல்பு நிலைக்குத் திரும்பும் என்று தெரிவித்துள்ளார்.இதற்கிடையே, அமெரிக்காவின் பழமையான விமானப் போக்குவரத்து கட்டுப்பாட்டு அமைப்புகளை நவீனப்படுத்த 50 பில்லியன் டாலர் நிதி தேவை என்று போக்குவரத்துத்துறை மந்திரி வலியுறுத்தியுள்ளார்.

X