துருக்கி: இஸ்தான்புல் நகரில் கடும் பனிப்பொழிவால் பல விமானங்கள் ரத்து

கடும் பனிப்பொழிவின் காரணமாக இஸ்தான்புல் விமானநிலையத்தில் பனி குவிந்து கானப்படுகிறது.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

இஸ்தான்புல்,

துருக்கியின் இஸ்தான்புல் நகரில் கடும் பனிப்பொழிவு நிலவி வருகிறது. ஒன்றரை கோடிக்கும் அதிகமான மக்கள் வசிக்கும் நகரில் கடந்த வார இறுதியில் பனிப்பொழிவு தொடங்கி படிப்படியாக அதிகரித்தது.

கடும் பனிப்பொழிவின் காரணமாக இஸ்தான்புல் விமானநிலையத்தில் பனி குவிந்து கானப்படுகிறது. இதனால் அங்கு ஏராளமான விமானங்கள் இரண்டாவது நாளாக ரத்து செய்யப்பட்டுள்ளன.

பனியால், அங்கு போக்குவரத்து முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் சுமார் 4,600 பேர் சாலைகளிலும் பிற இடங்களிலும் சிக்கித் தவிக்கின்றனர், ஆயிரக்கணக்கானோர் தற்காலிக வீடுகளில் தங்க வைக்கப்பட்டுள்ளனர் என்று அந்நாட்டின் பேரிடர் மற்றும் அவசரகால ஆணையம் தெரிவித்துள்ளது.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com