தென்ஆப்பிரிக்காவில் பெருவெள்ளம்; 395 பேர் உயிரிழப்பு

தென்ஆப்பிரிக்காவில் ஏற்பட்டுள்ள பெருவெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 395 ஆக உயர்வடைந்து உள்ளது.
தென்ஆப்பிரிக்காவில் பெருவெள்ளம்; 395 பேர் உயிரிழப்பு
Published on

கேப்டவுன்,

தென்ஆப்பிரிக்கா நாட்டில் குவாஜுலு-நேட்டல் மாகாணத்தில் கடந்த திங்கட்கிழமையில் இருந்து கனமழை பெய்து வருகிறது. இதனால், பல்வேறு நீர்நிலைகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது.

கனமழையால் சாலைகள், வீடுகள், பள்ளி கூடங்கள், மின் கம்பங்கள் மற்றும் பல அரசு கட்டிடங்கள் சேதமடைந்து உள்ளன.

இதுபற்றி மாகாண நிர்வாக ஒத்துழைப்பு மற்றும் கலாசார விவகார செயல் குழு உறுப்பினர் சிபோ லோமுகா கூறும்போது, வெள்ளம் பாதித்த பகுதிகளில் நிவாரண பணிகளுக்கு உதவியாக செயல்பட மற்றும் சட்டம் ஒழுங்கை பாதுகாக்க 4 ஆயிரம் போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர்.

இதேபோன்று சாலைகள், குடிநீர் வினியோகம், சுகாதாரம் மற்றும் மின்வசதி உள்ளிட்ட பாதிப்படைந்த உட்கட்டமைப்பு வசதிகளை சீர்செய்யும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர் என கூறியுள்ளார்.

எனினும், வருகிற நாட்களில் மாகாணத்தின் சில பகுதிகளில் கூடுதலான மழை பெய்ய கூடும் என அந்நாட்டு வானிலை மையம் எச்சரிக்கை விடுத்து உள்ளது.

இதுபற்றி லோமுகா கூறும்போது, இன்று மதியத்தில் இருந்து கடற்கரை பகுதியில் இருந்து பாதிப்புகளை ஏற்படுத்த கூடிய அளவுக்கு காற்று வேகமுடன் வீச கூடும். அது இன்று மாலை வரை நீடிக்க கூடும். தொடர்ந்து, பரவலாக பல பகுதிகளில் கனமழையும் பெய்ய கூடும் என்று தெரிவித்து உள்ளார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com