அமெரிக்காவில் வெள்ளப்பெருக்கு: 20 பேர் உயிரிழப்பு; 50 பேர் மாயம்

அமெரிக்காவின் டென்னசியில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் சிக்கி 20 பேர் உயிரிழந்து உள்ளனர்.
அமெரிக்காவில் வெள்ளப்பெருக்கு: 20 பேர் உயிரிழப்பு; 50 பேர் மாயம்
Published on

வாஷிங்டன்,

அமெரிக்காவின் டென்னசி மாகாணத்தில் கடந்த வாரம் பெய்த கனமழையை தொடர்ந்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இந்த வெள்ளத்தில் சிக்கி பல குழந்தைகள் உள்பட 20 பேர் வரை உயிரிழந்து உள்ளனர். அவர்களில் 7 மாத இரட்டை குழந்தைகளும் அடங்கும். இதுதவிர, 50 பேர் காணாமல் போயுள்ளனர்.

வெள்ளநீரானது, சில இடங்களில் வீடுகளின் மேற்கூரை வரை சூழ்ந்து காணப்படுகிறது. சாலைகள் மற்றும் நெடுஞ்சாலைகள் வெள்ளநீர் தேங்கி காணப்படுகிறது. மின் வினியோகம் தடைப்பட்டு 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் பாதிப்படைந்து உள்ளனர்.

அமெரிக்க அதிபர் பைடன் வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்கள் அனைவருக்கும் தனது இரங்கல்களை தெரிவித்து கொண்டார். தேவையான உதவிகள் அனைத்தும் வழங்கப்படும் என்றும் கூறியுள்ளார். டென்னசி மாகாணத்தில் 3வது கட்ட அவசரநிலை அறிவிக்கப்பட்டு உள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com