காங்கோ நாட்டின் நிலச்சரிவில் சிக்கி 39 பேர் பலி

காங்கோ நாட்டின் தலைநகர் கின்ஷாசா அருகே நிலச்சரிவில் சிக்கி 39 பேர் உயிரிழந்தனர்.
காங்கோ நாட்டின் நிலச்சரிவில் சிக்கி 39 பேர் பலி
Published on

கின்ஷாசா,

காங்கோ நாட்டில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்துவருகிறது. காங்கோ நாட்டின் தலைநகர் கின்ஷாசா அருகே கனமழையால் ஏற்பட்ட நிலச்சரிவுகளில் சிக்கி 39 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

தகவலறிந்து மீட்புக் குழுவினர் விரைந்து சென்று சேதமான வீடுகள் மற்றும் கட்டிடங்களின் இடிபாடுகளில் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

கனமழை காரணமாக நிலச்சரிவு ஏற்பட்டு வீடுகள் இடிந்ததால் அப்பகுதி மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com