ஜப்பானில் வெளுத்துக்கட்டியது மழை - 10 பேர் பலி

ஜப்பானில் சிபா, புகுஷிமா மாகாணங்களில் நேற்று முன்தினம் பெய்த பலத்த மழையில் 10 பேர் உயிரிழந்தனர்.
ஜப்பானில் வெளுத்துக்கட்டியது மழை - 10 பேர் பலி
Published on

டோக்கியோ,

ஜப்பானில் சிபா, புகுஷிமா மாகாணங்களில் நேற்று முன்தினம் பலத்த மழை பெய்தது. சிபா மாகாணத்தில் ஒரு மாதம் பெய்ய வேண்டிய மழை அரை நாளில் கொட்டி தீர்த்தது. 13 ஆறுகள் கரை புரண்டோடுகின்றன. தாழ்வான பகுதிகளில் வசித்து வந்த 50 ஆயிரம் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தப்பட்டனர். பல இடங்களில் நிலச்சரிவுகள் ஏற்பட்டுள்ளன.

இரு மாகாணங்களிலும் வெளுத்துக்கட்டிய மழையால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

நிலச்சரிவில் 3 பேர் பலியாகினர். 2 பேர் வெள்ளத்தில் அடித்துச்செல்லப்பட்டு உயிரிழந்தனர். 3 பேர் காருடன் மூழ்கி பலியாகினர். மழை தொடர்பான விபத்தில் சிக்கி 2 பேர் இறந்தனர். 4 பேரை காணவில்லை.

மழை, வெள்ளம் பாதித்த பகுதிகளில் மக்களை காப்பாற்றும் பணியில் நாட்டின் பேரிடர் மீட்பு படையினர் ஈடுபடுமாறு பிரதமர் ஷின்ஜோ அபே உத்தரவிட்டார்.

டோக்கியோவில் பலத்த மழையால் நரிட்டா சர்வதேச விமான நிலையத்தில் பல விமான சேவைகள் ரத்தாகின. 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பயணிகள் விமான நிலையத்தில் இரவை கழிக்கிற நிலைக்கு தள்ளப்பட்டனர். அவர்களுக்கு தேவையான போர்வைகள், உணவுகள் அனைத்தையும் விமான நிலைய நிர்வாகம் வழங்கியது.

நேற்று காலை முதல் விமான சேவைகள் மீண்டும் இயங்க தொடங்கி உள்ளன.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com