இங்கிலாந்து ராணி பவள விழா கொண்டாட்ட நிகழ்ச்சியில் பறக்கும் தட்டு சர்ச்சை

இங்கிலாந்து ராணி 2ம் எலிசபெத்தின் பவள விழா கொண்டாட்டத்தில் வானில் பறக்கும் தட்டு பறந்தது என சர்ச்சை ஏற்பட்டு உள்ளது.
இங்கிலாந்து ராணி பவள விழா கொண்டாட்ட நிகழ்ச்சியில் பறக்கும் தட்டு சர்ச்சை
Published on

லண்டன்,

இங்கிலாந்து நாட்டில் ராணி 2ம் எலிசபெத்தின் பவள விழா கொண்டாட்டம் கடந்த 2ந்தேதி நடந்தது. இதனை காண ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டிருந்தனர். இங்கிலாந்து அரச குடும்பம் பக்கிங்காம் அரண்மனையில் இருந்தபடி இந்த கொண்டாட்ட நிகழ்வுகளை கண்டு ரசித்தது.

இதன் ஒரு பகுதியாக 9 விமானங்கள் வரிசையாக அணிவகுத்து வானில் பறந்தன. அப்படி பறந்து செல்லும்போது, அதன் பின்னால் சிவப்பு, வெண்மை மற்றும் நீல நிற புகை வெளியேறி காண்போரை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. இதனை உலகெங்கிலும் உள்ள பார்வையாளர்களை ஈர்த்தது.

ஆனால், இந்த புகைப்படம் வெளியான பின்பு, இணையதளத்தில் மற்றொரு சர்ச்சை வெடித்தது. அதில், திட்டமிடாத வகையில், 10வது விமானம் ஒன்றும் பறந்து சென்றுள்ளது என பலர் தெரிவித்து உள்ளனர்.

அது பறக்கும் தட்டு என்றும் விமானங்களுக்கு பின்னால் அது வானில் சென்றது என்றும் சிலர் கூறியுள்ளனர். அதனை பறக்கும் தட்டு ஆர்வலர்களான சிலர் குறிப்பிட்டு காட்டி, புகைப்படம் ஒன்றையும் வெளியிட்டு உள்ளனர்.

எனினும், இதனை பலர் மறுத்த நிலையில், அது ஆளில்லா விமானங்களில் ஒன்றாக இருக்க கூடும். அல்லது விமானம் பறந்த வேகத்தில் பறவை எழுந்து பறந்திருக்க கூடும் என்று சிலர் கூறுகின்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com