இலங்கையில் முன்னாள் ராணுவ தளபதி சேனநாயகா ஜனாதிபதி தேர்தலில் போட்டி

இலங்கையில் முன்னாள் ராணுவ தளபதி சேனநாயகா ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட உள்ளார்.
இலங்கையில் முன்னாள் ராணுவ தளபதி சேனநாயகா ஜனாதிபதி தேர்தலில் போட்டி
Published on

கொழும்பு,

இலங்கை ஜனாதிபதி தேர்தல் நவம்பர் மாதம் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் இலங்கையின் முன்னாள் ராணுவ தளபதி மகேஷ் சேனநாயகாவும் குதிக்கிறார். பல்வேறு சமுதாய சங்கங்கள் இணைந்த தேசிய மக்கள் இயக்கம் சார்பில் அவர் தேர்தலில் போட்டியிட உள்ளார். இலங்கையில் ஒரு மாற்று சக்தி தேவை என்றும், தானே அந்த மாற்று சக்தி என்றும் அவர் கூறினார். இவர் 2010 தேர்தலில் ராஜபக்சேவை எதிர்த்து போட்டியிட்டு தோல்வி அடைந்த சரத் பொன்சேகாவின் தீவிர ஆதரவாளர்.

ஜனாதிபதி தேர்தலில் ஏற்கனவே இலங்கை மக்கள் கட்சியின் சார்பில் கோத்தபய ராஜபக்சே, ஆளும் ஐக்கிய தேசிய கட்சியின் சஜித் பிரேமதாசா, புதிய இடதுசாரி முன்னணி சார்பில் அனுரா குமார திசநாயகா ஆகியோர் களத்தில் உள்ளனர். 4-வது நபராக சேனநாயகா களம் இறங்குகிறார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com