அமெரிக்க தாக்குதலில் காயமடைந்த ஈரானின் முன்னாள் வெளியுறவுத்துறை மந்திரி பலி

கடந்த 28-ம் தேதி தெஹ்ரான் உள்ளிட்ட முக்கிய நகரங்களின் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேலிய படைகள் தாக்குதல் நடத்தின.
அமெரிக்க தாக்குதலில் காயமடைந்த ஈரானின் முன்னாள் வெளியுறவுத்துறை மந்திரி பலி
Published on

தெஹ்ரான்,

அணுசக்தி ஒப்பந்த விவகாரத்தில் ஈரான் மீது அமெரிக்கா - இஸ்ரேல் இணைந்து தொடுத்த போர் 40 நாட்களுக்கு நீடித்த நிலையில் கடந்த 7-ம் தேதி 2 வார கால போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டது.

இந்தநிலையில் கடந்த 28-ம் தேதி தலைநகர் தெஹ்ரான் உள்ளிட்ட முக்கிய நகரங்களின் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேலிய படைகள் தாக்குதல் நடத்தின. இரு தரப்புக்கும் நடைபெற்ற சண்டையில் அமெரிக்கா மற்றும் இஸ்ரேலிய படைகளால் ஈரானின் முக்கிய உயர் அதிகாரிகள், ராணுவ தளபதிகள் கொல்லப்பட்டனர்.

இதனை தொடர்ந்து கடந்த ஏப்.1-ம் தேதி தெஹ்ரானின் குடியிருப்பு பகுதிகளின் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேலிய படைகள் நடத்திய தாக்குதலில் முன்னாள் வெளியுறவுத்துறை மந்திரி மறைந்த காமேனியின் வெளியுறவுத்துறை ஆலோசகருமான கமல் கராசியின் வீடும் தகர்க்கப்பட்டது. இந்த தாக்குதலில் மந்திரியின் கராசியின் மனைவி கொல்லப்பட்ட நிலையில், அவர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.

இந்தநிலையில் சிகிச்சை பலனின்றி கமல் கராசி நேற்று இரவு உயிரிழந்ததாக ஈரானின் அரசு ஊடகங்கள் தெரிவித்துள்ளன. முன்னதாக ஈரான் மீதான அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் தாக்குதலில் அந்நாட்டின் தலைமை மதகுரு அயதுல்லா அலி காமேனி கொல்லப்பட்டது குறிப்பிடத்தக்கது.

X

Daily Thanthi
www.dailythanthi.com