இலங்கை மத்திய வங்கியின் முன்னாள் கவர்னர் நாட்டை விட்டு வெளியேற தடை - கோர்ட்டு உத்தரவு

இலங்கை மத்திய வங்கியின் முன்னாள் கவர்னர் நாட்டை விட்டு வெளியேற தடை விதித்து கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
Image Courtesy: ANI
Image Courtesy: ANI
Published on

கொழும்பு,

இலங்கையில் கடுமையான பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளதை தொடர்ந்து அந்த நாட்டு மத்திய வங்கியின் கவர்னராக இருந்த அஜித் நிவ்ராத் கப்ரால் கடந்த வாரம் ராஜினாமா செய்தார். நாடு மிகப்பெரும் இடரில் சிக்கியிருக்கும் வேளையில் அவரது பதவி விலகல் மேலும் பின்விளைவுகளை ஏற்படுத்தி உள்ளது.

இந்த நிலையில், இலங்கை மத்திய வங்கியின் கவர்னராக கடந்த 2006 முதல் 2015-ம் ஆண்டு வரையிலான இவரது முதல் பதவிக்காலத்தின்போது நிர்வாகத்தில் இவர் செய்த தவறுகள் தொடர்பாக கொழும்பு தலைமை மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் பொதுநல வழக்கு தொடரப்பட்டு உள்ளது.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, அஜித் நிவ்ராத் நாட்டை விட்டு வெளியேற தடை விதித்தார். அத்துடன் இந்த வழக்கில் வருகிற 18-ந்தேதி கோர்ட்டில் ஆஜராகவும் அவர் உத்தரவிட்டார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com