ஊழல் வழக்கில் மொரிசியஸ் முன்னாள் பிரதமர் கைது


ஊழல் வழக்கில் மொரிசியஸ் முன்னாள் பிரதமர் கைது
x
தினத்தந்தி 17 Feb 2025 2:00 AM IST (Updated: 17 Feb 2025 2:01 AM IST)
t-max-icont-min-icon

மொரிசியஸ் முன்னாள் பிரதமர் பதவியில் இருந்தபோது தன்னுடைய அதிகாரத்தை பயன்படுத்தி சொத்து குவித்ததாக புகார்கள் எழுந்தது.

போர்ட் லூயிஸ்,

இந்திய பெருங்கடலில் ஆப்பிரிக்கா அருகே உள்ள தீவு நாடாக மொரிசியஸ் உள்ளது. குட்டித்தீவு நாடான மொரிசியசில் இந்திய வம்சாவளியினர் குறிப்பாக தமிழ்நாட்டை சேர்ந்தவர்கள் அதிகளவில் வசித்து வருகிறார்கள். அந்த நாட்டின் பிரதமராக பிரவிந்த் ஜக்நாத் பதவி வகித்து வந்தார். கடந்த ஆண்டு நடந்த பொது தேர்தலில் அவர் தலைமையிலான கட்சி தோல்வி அடைந்தது.

முன்னதாக பாதுகாப்பு, நிதித்துறை, உள்துறை மற்றும் வெளியுறவு மந்திரியாகவும் பிரவிந்த் ஜக்நாத் பொறுப்பு வகித்தார். இந்தநிலையில் அவர் பதவியில் இருந்தபோது தன்னுடைய அதிகாரத்தை பயன்படுத்தி சொத்து குவித்ததாக புகார்கள் எழுந்தது.

அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து அவருடைய வீடு மற்றும் அலுவலகங்களில் சோதனை நடத்தினர். அப்போது கணக்கில் வராத ரூ.20¾ ஆயிரம் கோடி (2.3 மில்லியன் அமெரிக்க டாலர்கள்) கைப்பற்றப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டது. தொடர்ந்து அவரை அந்த நாட்டின் ஊழல்தடுப்பு பிரிவு போலீசார் கைது செய்தனர்.

1 More update

Next Story