பர்வேஸ் முஷாரப் புதிய நோய் பாதிப்பிற்கு சிகிச்சை பெறுகிறார்; பாகிஸ்தான் நாளிதழ் தகவல்

பாகிஸ்தானின் முன்னாள் அதிபர் பர்வேஸ் முஷாரப் புதிய வியாதியால் பாதிப்படைந்து பலவீனமடைந்து வருகிறார் என அந்நாட்டின் தி டான் நாளிதழ் தகவல் வெளியிட்டு உள்ளது.
பர்வேஸ் முஷாரப் புதிய நோய் பாதிப்பிற்கு சிகிச்சை பெறுகிறார்; பாகிஸ்தான் நாளிதழ் தகவல்
Published on

இஸ்லாமாபாத்,

பாகிஸ்தானில் அதிபராக இருந்தவர் பர்வேஸ் முஷாரப். கடந்த 2016ம் ஆண்டு மார்ச்சில் பாகிஸ்தானில் இருந்து வெளியேறி வெளிநாட்டுக்கு அவர் தப்பி சென்றார். அவரை தேச துரோக வழக்கு ஒன்றில் சிறப்பு நீதிமன்றம் ஒன்று தேடப்படும் குற்றவாளியாக அறிவித்தது.

இதனை தொடர்ந்து அவர் நாடு திரும்ப உத்தரவிடப்பட்டது. ஆனால் அவர் பாகிஸ்தானுக்கு திரும்பவில்லை. இந்த நிலையில், அனைத்து பாகிஸ்தான் முஸ்லிம் லீக் தலைவர் முகமது அம்ஜத் வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில், முன்னாள் அதிபர் முஷாரப்புக்கு குறிப்பிட்டு சொல்ல முடியாத வகையில் புதிய நோய் பாதிப்பு ஏற்பட்டு உள்ளது.

அவர் அமெரிக்காவில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், மற்றொரு நோய் பாதிப்பிற்காகவும் அவர் சிகிச்சை பெற்று வருகிறார். இதற்காக அவர் ஒவ்வொரு 3 மாதங்களுக்கு ஒரு முறை புதிய நோய்க்கு சிகிச்சை பெறுவதற்காக இங்கிலாந்து நாட்டுக்கு பயணம் மேற்கொண்டு வருகிறார். இதனாலேயே அவருக்கு எதிரான தேச துரோக வழக்கில் ஆஜராக அவரால் நாட்டுக்கு திரும்ப முடியவில்லை.

இந்த நிலையில், முஷாரப்பின் நோய் பாதிப்பு பற்றி எதுவும் வெளியே கூற முடியாது. ஆனால், சிகிச்சை பற்றிய ஆவணங்கள் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என கூறினார். முஷாரப்பின் நெருங்கிய உதவியாளரான அம்ஜத் சமீபத்தில் அனைத்து பாகிஸ்தான் முஸ்லிம் லீக் தலைவர் பதவியில் இருந்து விலகினார்.

முஷாரப்பின் உடல் நல குறைவை அடுத்து, பாகிஸ்தான் அரசு சுதந்திர மற்றும் நேர்மையான விசாரணையை நடத்த வேண்டும் என அம்ஜத் வலியுறுத்தி உள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com