பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப்பின் விசாவை நீட்டிக்க இங்கிலாந்து மறுப்பு

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் ஊழல் வழக்கில் 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டு லாகூர் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். அங்கு அவருக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்ப்பட்டதை தொடர்ந்து அவரை லண்டன் அழைத்து சென்று சிகிச்சை அளிக்கவேண்டும் என அவரது மருத்துவர்கள் தெரிவித்தனர். அதை ஏற்று, இஸ்லாமாபாத் ஐகோர்ட்டு அவருக்கு 4 வாரங்களுக்கு ஜாமீன் வழங்கியது.
பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப்பின் விசாவை நீட்டிக்க இங்கிலாந்து மறுப்பு
Published on

அதனை தொடர்ந்து, 2019-ம் ஆண்டு நவம்பர் மாதம் லண்டன் சென்ற நவாஸ் ஷெரீப் ஜாமீன் காலம் முடிந்த பிறகும் சிகிச்சை பெறுவதாக கூறி தொடர்ந்து லண்டனிலேயே தங்கியுள்ளார்.இதன் காரணமாக பிரதமர் இம்ரான் கான்

தலைமையிலான பாகிஸ்தான் அரசு நவாஸ் ஷெரீப்பை தேடப்படும் குற்றவாளியாக அறிவித்து, அவரை லண்டனில் இருந்து நாடு கடத்தி கொண்டு வரும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது.இந்தநிலையில் நவாஸ் ஷெரீப் மருத்துவ

காரணங்களுக்காக தான் தொடர்ந்து லண்டனில் தங்கியிருக்க தனது விசாவை நீட்டிக்க கோரி இங்கிலாந்து அரசுக்கு கோரிக்கை வைத்தார்.ஆனால் இங்கிலாந்து உள்துறை அமைச்சகம் நவாஸ் ஷெரீப்பின் விசாவை நீட்டிக்க மறுத்து விட்டது. இதன் மூலம் நவாஸ் ஷெரீப்பை பாகிஸ்தானுக்கு நாடு கடத்துவதற்கான வாய்ப்பு கிடைத்துள்ளது.

எனினும் உள்துறை அமைச்சகத்தின் இந்த முடிவை எதிர்த்து நவாஸ் ஷெரீப் இங்கிலாந்து குடியேற்ற தீர்ப்பாயத்தில் மேல்முறையீடு செய்துள்ளார். இந்த தீர்ப்பாயம் தனது முடிவை அறிவிக்கும் வரையில் நவாஸ் ஷெரீப் இங்கிலாந்தில் சட்டபூர்வமாக தங்கி இருக்க முடியும் என அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com