பாகிஸ்தான் முன்னாள் அதிபர் பர்வேஸ் முஷரப் உடல் கராச்சியில் ராணுவ மரியாதையுடன் அடக்கம்

ராணுவ கல்லறை தோட்டத்திற்கு முஷரப் உடல் எடுத்துச் செல்லப்பட்டு, முழு ராணுவ மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டது.
பாகிஸ்தான் முன்னாள் அதிபர் பர்வேஸ் முஷரப் உடல் கராச்சியில் ராணுவ மரியாதையுடன் அடக்கம்
Published on

இஸ்லாமாபாத்,

பாகிஸ்தான் முன்னாள் அதிபர் பர்வேஸ் முஷரப் (வயது 79) உடல்நலக்குறைவு காரணமாக கடந்த 5-ந்தேதி துபாயில் காலமானார். இதையடுத்து அவரது உடல் சிறப்பு விமானம் மூலம் துபாயில் இருந்து பாகிஸ்தானின் கராச்சிக்கு கொண்டு வரப்பட்டது.

இன்று கராச்சி கண்டோன்மென்ட் பகுதியில் உள்ள குல்மகர் போலோ மைதானத்தில் இறுதிச்சடங்குகள் மற்றும் பிரார்த்தனை நடைபெற்றது. அதன்பின்னர் அங்குள்ள ராணுவ கல்லறை தோட்டத்திற்கு முஷரப் உடல் எடுத்துச் செல்லப்பட்டு, முழு ராணுவ மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டது.

இறுதிச்சடங்கில் தற்போதைய அதிபர் ஆரிப் ஆல்வி, பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் ஆகியோர் கலந்துகொள்ளவில்லை. அதே சமயம் கூட்டுப் படைகளின் தலைவர் சாஹிர் ஷம்ஷாத் மிர்சா, முன்னாள் ராணுவத் தளபதிகள், ஐ.எஸ்.ஐ. உளவு அமைப்பின் முன்னாள் தலைவர்கள் மற்றும் ஓய்வு பெற்ற பல்வேறு ராணுவ அதிகாரிகள் இறுதிச்சடங்கில் கலந்து கொண்டனர். 

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com