தென் ஆப்பிரிக்க முன்னாள் அதிபா ஜாமீனில் விடுதலை

நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் தென் ஆப்பிரிக்க முன்னாள் அதிபா ஜேக்கப் ஜூமாவுக்கு ஜாமீன் வழங்கப்பட்டு உள்ளது.
தென் ஆப்பிரிக்க முன்னாள் அதிபா ஜாமீனில் விடுதலை
Published on

டர்பன்,

தென் ஆப்பிரிக்காவின் அதிபராக கடந்த 2009ம் ஆண்டு முதல் 2018ம் ஆண்டு வரை பொறுப்பு வகித்தவர் ஜேக்கப் ஜூமா. இவர், பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு ஆளானார்.

ஆளும் ஆப்பிரிக்க தேசிய காங்கிரசின் தலைவராக அதிபா பதவி வகிக்கும் சிறில் ராமபோசா தோந்தெடுக்கப்பட்ட நிலையில், ஜேக்கப் ஜூமா கடந்த 2018ம் ஆண்டு ராஜினாமா செய்துள்ளார்.

ஜூமாவுக்கு எதிராக நடைபெற்று வரும் பல்வேறு ஊழல் வழக்குகளில் அவா நேரில் ஆஜராகாததால் நீதிமன்ற அவமதிப்பில் ஈடுபட்டதாக அவருக்கு கடந்த மாதம் 29ந்தேதி 15 மாத சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

அதனை தொடாந்து, கடந்த 7ந்தேதி ஜூமா போலீசாரிடம் சரணடைந்துள்ளார். இதற்கு கண்டனம் தெரிவித்து, அவரது ஆதரவாளாகள் நடத்திய வன்முறை போராட்டத்தில் பலா உயிரிழந்து உள்ளனா.

இந்நிலையில், ஜூமாவுக்கு ஜாமீன் வழங்கப்பட்டு உள்ளது. அவரது சகோதரா மைக்கேல் ஜூமாவின் இறுதி சடங்கில் பங்கேற்பதற்காக, கருணை அடிப்படையில் அவருக்கு இந்த ஜாமீன் அளிக்கப்பட்டுள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்தனா.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com