கொடுங்கோல் அரசனைப் போல் டிரம்ப் ஆட்சி செய்கிறார் - கமலா ஹாரிஸ் கடும் விமர்சனம்

மக்கள் தங்கள் மனதில் உள்ள கோபத்தை வாக்குச்சீட்டின் மூலம் வெளிப்படுத்த வேண்டிய தருணம் வந்துவிட்டது என்று கமலா ஹாரிஸ் கூறினார்.
கமலா ஹாரிஸ்
Published on: 

அமெரிக்காவில் இடைக்காலத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், நியூ ஹாம்ப்ஷயரில் நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் முன்னாள் துணை ஜனாதிபதி கமலா ஹாரிஸ், ஜனாதிபதி டொனால்டு டிரம்பை கடுமையாக விமர்சித்துள்ளார்.

தேர்தல் பிரசாரத்தில் தீவிரம்

நவம்பர் 3-ந்தேதி நடைபெற உள்ள அமெரிக்க இடைக்காலத் தேர்தலை முன்னிட்டு, ஜனநாயகக் கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டுவதற்காக கமலா ஹாரிஸ் பல்வேறு மாகாணங்களுக்குச் சென்று பிரசாரம் செய்து வருகிறார். தனது தேர்தல் பிரசாரத்தில், அமெரிக்க அதிபர் டிரம்ப் தலைமையிலான அரசின் கொள்கைகள், பொருளாதார நிலை, சுகாதாரத் திட்டங்கள் மற்றும் வெளிநாட்டுக் கொள்கை ஆகியவற்றை கமலா ஹாரிஸ் கடுமையாக விமர்சித்துள்ளார்.

மேலும், கமலா ஹாரிஸ் பேசுகையில், மிகவும் சக்திவாய்ந்தவர்களாகத் தோன்றும் சிலர் திறமையற்றவர்கள் என்பது அம்பலாகியுள்ளது. மக்கள் தங்கள் மனதில் உள்ள கோபத்தை வாக்குச்சீட்டின் மூலம் வெளிப்படுத்த வேண்டிய தருணம் வந்துவிட்டது. ஒரு கொடுங்கோல் அரசனை போல டிரம்ப் ஆட்சி செய்து வருகிறார்” என்றார்.

2028 ஜனாதிபதி தேர்தலிலும் போட்டியா?

2024-ம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலில் டிரம்பிடம் தோல்வியடைந்த கமலா ஹாரிஸ், மீண்டும் 2028-ம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவாரா என்ற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது. எனினும், தற்போது நடைபெற உள்ள இடைக்காலத் தேர்தலில் ஜனநாயகக் கட்சியினருக்கு வெற்றி தேடித்தருவதே தனது முக்கிய நோக்கம் என்று அவர் தெரிவித்துள்ளார்

X

Follow us on Google
Daily Thanthi
www.dailythanthi.com