ஆஸ்திரேலியாவில் துப்பாக்கி சூடு; 4 பேர் பலி

ஆஸ்திரேலியாவில் நடந்த துப்பாக்கி சூட்டில் 4 பேர் கொல்லப்பட்டனர்.
ஆஸ்திரேலியாவில் துப்பாக்கி சூடு; 4 பேர் பலி
Published on

ஆஸ்திரேலியாவின் வடக்கு பகுதியில் அமைந்த டார்வின் நகரில் மர்ம நபர் ஒருவர் திடீரென நடத்திய துப்பாக்கி சூட்டில் 4 பேர் கொல்லப்பட்டனர். 2 பேர் காயமடைந்தனர். துப்பாக்கி சூட்டில் ஈடுபட்ட 45 வயது நபரை பிடித்து போலீசார் கைது செய்து விசாரணைக்கு அழைத்து சென்றுள்ளனர்.

இந்த தாக்குதல் பற்றி சம்பவத்தினை நேரில் கண்ட சாட்சியான ஒருவர் கூறும்பொழுது, டார்வின் ஓட்டலுக்குள் துப்பாக்கியுடன் புகுந்த நபர், ஓட்டலின் அனைத்து அறைகளிலும் சுட்டு கொண்டே சென்றார். ஒவ்வொரு அறையாக சென்று அங்கு யாரேனும் இருக்கிறார்களா என பார்த்து, அங்கிருந்த அனைவரையும் சுட்டார்.

இதன்பின் வேகமுடன் ஓட்டலில் இருந்து வெளியேறிய அந்நபர், தன்னுடைய டொயோட்டா வேனுக்குள் துள்ளி குதித்து அங்கிருந்து தப்பி சென்றார் என கூறினார். இதேபோன்று மற்றொரு பெண் சாட்சி, அதே ஓட்டலில் இருந்து தோல் முழுவதும் துளையுடன் காணப்பட்ட பெண் ஒருவரை அவரது காதலர் தூக்கி கொண்டு வெளியே ஓடினார். ரத்தம் வழிந்த அந்த பெண்ணுக்கு நான் உதவி செய்தேன் என கூறினார்.

இதுபற்றி அந்நாட்டு பிரதமர் ஸ்காட் மோரிசன் லண்டன் நகரில் செய்தியாளர்களிடம் கூறும்பொழுது, இது தீவிரவாத தொடர்புடைய தாக்குதல் அல்ல என கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com