இஸ்ரேல் எல்லையில் பாலஸ்தீனியர்களின் போராட்டத்தில் துப்பாக்கி சூடு; 4 பேர் பலி

இஸ்ரேல் மற்றும் காசா எல்லையில் போராட்டக்காரர்கள் மீது இஸ்ரேலிய படைகள் நடத்திய துப்பாக்கி சூட்டில் 4 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டனர்.
இஸ்ரேல் எல்லையில் பாலஸ்தீனியர்களின் போராட்டத்தில் துப்பாக்கி சூடு; 4 பேர் பலி
Published on

காசா நகரம்,

அமெரிக்கா தனது இஸ்ரேல் தூதரகத்தினை கடந்த வருடம் ஜெருசலேம் நகருக்கு இடம் மாற்றியது. இதற்கு பாலஸ்தீனியர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். தொடர்ந்து இஸ்ரேலுக்கு எதிராக வாரந்தோறும் பாலஸ்தீனியர்கள் போராட்டங்களில் ஈடுபட்டு வந்தனர்.

இதில் கடந்த மே 14ந்தேதி 60 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டனர். இதன்பின் எகிப்து தலைமையிலான பேச்சுவார்த்தையினை தொடர்ந்து பதற்றம் தணிந்து போராட்டக்காரர்கள் பலியாவது தடுக்கப்பட்டது.

இந்த போராட்டத்தின் முதலாம் ஆண்டுதினத்தினை முன்னிட்டு பாலஸ்தீனியர்கள் ஆயிரக்கணக்கில் இன்று இஸ்ரேல் மற்றும் காசா எல்லை பகுதியில் ஒன்று திரண்டனர்.

இஸ்ரேலில் வரும் ஏப்ரலில் தேர்தல் நடைபெற உள்ளது. பதற்றம் நிறைந்த இந்த சூழலில் எல்லை பகுதியில் ஆயிரக்கணக்கான இஸ்ரேலிய படைகள் குவிக்கப்பட்டன.

போராட்டத்தில் ஈடுபட்டவர்களில் சிறு இளைஞர் குழுக்கள் காசா நகரின் கிழக்கே வேலியை அணுகி அதனை பலமுறை உடைக்க முற்பட்டனர். அவர்களை கலைக்க கண்ணீர் புகை குண்டு வீசப்பட்டும் பலனின்றி துப்பாக்கி சூடு நடத்தப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவிக்க கற்களை வீசி பாலஸ்தீனிய இளைஞர்கள் தாக்குதல் நடத்தினர்.

இதனால் போராட்டக்காரர்களை கட்டுப்படுத்துவதற்காக அவர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தப்பட்டது. இந்த சம்பவத்தில் 4 பேர் பலியாகினர். அவர்களில் ஒருவர் பிலால் அல் நஜ்ஜார் (வயது 17) என அடையாளம் காணப்பட்டது. மற்ற 3 பேரும் 17 வயது கொண்டவர்கள். இந்த துப்பாக்கி சூட்டில் 316 பேர் காயமடைந்தனர்.

போராட்டத்தில் 40 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் ஈடுபட்டனர் என இஸ்ரேலிய ராணுவம் தெரிவித்துள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com