கூகுள் மற்றும் பேஸ்புக் நிறுவனங்களுக்கு அபராதம் விதித்த பிரான்சு..!

பிரான்சு நாடு கூகுள் மற்றும் பேஸ்புக் நிறுவனங்களுக்கு அபராதம் விதித்துள்ளது.
கூகுள் மற்றும் பேஸ்புக் நிறுவனங்களுக்கு அபராதம் விதித்த பிரான்சு..!
Published on

பாரிஸ்,

பிரான்சு நாட்டில் கூகுள் மற்றும் பேஸ்புக் நிறுவனங்கள் பயனர்களின் குக்கீஸ்களை (Cookies) பயனர்களின் அனுமதியின்றி பயன்படுத்தி உள்ளனர். குக்கீஸ்கள் எனப்படுவது பயனர்களின் கம்ப்யூட்டர்களில் அவர்கள் மேற்கொள்ளும் இணையதள செயல்பாடுகளை சேமிக்கும் ஒரு முறையாகும்.

இந்த பயனர்களின் குக்கீஸ்களை விளம்பரங்களை பரிந்துரை செய்வதற்காக இந்த நிறுவனங்கள் பயன்படுத்தியுள்ளன. இந்த நிலையில் பயனர்களின் குக்கீஸ்களை பயன்படுத்தியதற்காக கூகுள் மற்றும் பேஸ்புக் நிறுவனங்களுக்கு முறையே தலா 150 மில்லியன் மற்றும் 60 மில்லியன் யூரோக்கள் என மொத்தம் 210 மில்லியன் யூரோக்களை அபராதமாக விதித்து பிரான்சின் தேசிய தகவல் தொழில்நுட்பம் மற்றும் சுதந்திர ஆணையம் (சிஎன்ஐஎல்) உத்தரவிட்டுள்ளது.

மேலும் 3 மாதத்திற்குள் இந்த நடவடிக்கைகள் 2 நிறுவனங்களும் மாற்றி அமைக்கவில்லை எனில் நாளொன்றுக்கு ஒரு லட்சம் யூரோக்கள் அபராதம் விதிக்கப்படும் என்றும் சிஎன்ஐஎல் தெரிவித்துள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com