பிரான்ஸ்: ரூ. 100 கோடி மதிப்புள்ள ஓவியங்கள் திருட்டு

4 ஓவியங்களில் 2 ஓவியங்கள் அருங்காட்சியகத்தில் உள்ள தோட்டத்தில் இருந்து மீட்கப்பட்டுள்ளன
திருடப்பட்ட ஓவியங்கள்
Published on

பாரிஸ்,

பிரான்சில் அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டிருந்த ரூ. 100 கோடி மதிப்புள்ள ஓவியங்கள் திருடப்பட்டுள்ளன.

4 ஓவியங்கள்

பிரான்ஸ் நாட்டின் 1841ம் ஆண்டு முதல் 1919ம் ஆண்டு வரை வாழ்ந்த புகழ்பெற்ற ஓவியர் பியர் அகஸ்ட் ரென்வார். இவர் வரைந்த உலகப்புகழ்பெற்ற 4 ஓவியங்கள் கார்க்னெஸ் சுர் மெர் நகரில் உள்ள அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டிருந்தன. இந்த 4 ஓவியங்களின் மொத்த மதிப்பு 9 மில்லியன் யூரோக்கள் (இந்திய மதிப்பில் சுமார் 100 கோடி ரூபாய்) ஆகும்.

திருட்டு

இந்நிலையில், அருங்காட்சியகத்தில் இருந்த 4 ஓவியங்களும் இன்று அதிகாலை திருடப்பட்டுள்ளன. அருங்காட்சியகத்திற்குள் நுழைந்த 2 பேர் கொண்ட 4 ஓவியங்களையும் திருடியுள்ளனர்.

மீட்கப்பட்ட ஓவியங்கள்

2 ஓவியங்கள் மீட்பு

இந்த சம்பவம் குறித்து அறிந்த போலீசார், விரைந்து சென்று அருங்காட்சியகத்தை சுற்றி தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

அப்போது, திருடப்பட்ட 4 ஓவியங்களில் 2 ஓவியங்கள் அருங்காட்சியகத்தில் உள்ள தோட்டத்தில் இருந்து மீட்கப்பட்டுள்ளன. எஞ்சிய 2 ஓவியங்களை திருடர்கள் எடுத்து சென்றுள்ளனர். இதையடுத்து, திருடப்பட்ட 2 ஓவியங்களையும், அதை திருடிச்சென்ற இருவரையும் போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com