ஐஎஸ் அமைப்பின் முக்கிய தலைவர் சுட்டுக்கொலை

அமெரிக்கா 5 மில்லியன் டாலர் பரிசு அறிவித்த ஐஎஸ் அமைப்பின் முக்கிய தலைவர் சுட்டுக்கொலை
ஐஎஸ் அமைப்பின் முக்கிய தலைவர் சுட்டுக்கொலை
Published on

பாரீஸ்:

சகாராவில், பிரான்ஸ் படை நடத்திய அதிரடி தாக்குதலில் ஐஎஸ்ஐஎஸ் அமைப்பின் தலைவன் அத்னான் அபு வாலித் அல்-சஹ்ராவி சுட்டுக்கொல்லப்பட்டார். இதனை பிரான்ஸ் அதிபர் தெரிவித்து உள்ளார்.

சகாராவில், கடந்த 2015ம் ஆண்டு ஐஎஸ் அமைப்பை நிறுவிய ஷராவி, மாலி, நைஜர் மற்றும் புர்கினா பாசோவில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கும் மூளையாக செயல்பட்டுள்ளார். பொது மக்கள் மற்றும் ராணுவ வீரர்களை குறிவைத்து தாக்குதல் நடத்தியுள்ளார். அவரை பற்றிய தகவல் தருவோருக்கு 5 மில்லியன் அமெரிக்க டாலர் பரிசு வழங்கப்படும் என அமெரிக்கா அறிவித்திருந்தது.

இந்த நிலையில், சகாராவில், பிரான்ஸ் அதிரடிப்படையினர் நடத்திய அதிரடி தாக்குதலில் சஹ்ராவி கொல்லப்பட்டதாக அந்நாட்டு அதிபர் இமானுவேல் மேக்ரான் தெரிவித்து உள்ளார். பயங்கரவாதத்திற்கு எதிரான போரில் இது மிகப்பெரிய வெற்றி எனவும் டுவிட்டரில் தெரிவித்து உள்ளார்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com