பிரான்சில் இடதுசாரி கூட்டணி அதிக இடங்களை கைப்பற்றும் - தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பில் தகவல்

பிரான்சில் இடதுசாரி கூட்டணி அதிக இடங்களை கைப்பற்றும் என தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பில் தெரியவந்துள்ளது.
பிரான்சில் இடதுசாரி கூட்டணி அதிக இடங்களை கைப்பற்றும் - தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பில் தகவல்
Published on

பாரிஸ்,

பிரான்ஸ் நாடாளுமன்ற தேர்தல் ஜூன் 30 மற்றும் ஜூலை 7ம் தேதிகளில் இரண்டு கட்டங்களாக நடைபெற்றது. 577 உறுப்பினர்களை கொண்ட பிரான்ஸ் நாடாளுமன்ற தேர்தல் ஐரோப்பாவில் நடைபெறும் முக்கிய தேர்தலாக பார்க்கப்படுகிறது.

நாடாளுமன்ற தேர்தலில் அதிபர் இம்மானுவேலின் மையவாத கூட்டணி, வலதுசாரி கூட்டணியான தேசிய பேரணி கூட்டணி, இடதுசாரி கூட்டணியான நியூ பாப்புலர் பிரண்ட் கூட்டணி போட்டியிட்டன. இதில், மரீன் லி பென் தலைமையிலான வலதுசாரி கூட்டணி வெற்றிபெறும் என எதிர்பார்க்கப்பட்டது.

இந்நிலையில், தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பில் பிரான்சில் இடதுசாரி கூட்டணி அதிக இடங்களை கைப்பற்றும் என தெரியவந்துள்ளது. இடதுசாரி கூட்டணியின் முக்கிய தலைவராக ஜீன் லூக் மெலன்சொன் உள்ளார். அதேவேளை, இடதுசாரி அதிக இடங்களை கைப்பற்றியபோதும் நாடாளுமன்றத்தில் ஆட்சியமைக்க தேவையான பெரும்பான்மை கிடைக்காது என தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பில் தெரியவந்துள்ளது. இதன் மூலம் தொங்கு நாடாளுமன்றம் உருவாகும் சூழ்நிலை ஏற்படலாம்.

தேர்தலில் பின்னடைவை சந்தித்துள்ள ஆளும் மையவாத கூட்டணியின் பிரான்ஸ் பிரதமர் கேப்ரியல் அட்டல் தனது பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார். தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பில் இடதுசாரி கூட்டணி அதிக இடங்களை கைப்பற்றும் என தெரிவிக்கப்பட்டபோதும், எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளதால் பிரான்சில் அரசியல் குழப்பம் ஏற்படும் சூழ்நிலை உருவாகியுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com