பிரான்சில் கால்பந்து கொண்டாட்டத்தின்போது வெடித்த மோதல் - 400க்கும் மேற்பட்டோர் கைது

பாரிசில் சாலையில் வாகனங்ளுக்கு தீ வைத்துக் கொளுத்தியதால் பதற்றமான சூழல் நிலவி வருகிறது.
பிரான்சில் கால்பந்து கொண்டாட்டத்தின்போது வெடித்த மோதல் - 400க்கும் மேற்பட்டோர் கைது
Published on

பாரீஸ்,

ஐரோப்பாவின் மிகப்பெரிய கால்பந்து தொடரான சாம்பியன்ஸ் லீக் இறுதிப்போட்டி நேற்றிரவு நடைபெற்றது. ஹங்கேரியில் நடைபெற்ற இந்தப் போட்டியில் 5ஆவது நிமிடத்தில் ஆர்செனலின் கை ஹைவெர்ட்ஸ் கோல் அடித்தார்.

முதல் பாதியில் ஆர்செனல் 1-0 என முன்னிலை வகித்தது. பின்னர், போட்டியின் 64ஆவது நிமிடத்தில் பெனால்டி வாய்ப்பில் டெம்பெலே கோல் அடித்து 1-1 என சமன்படுத்தினார். பின்னர், ஆட்டம் பெனால்டி ஷுட் அவுட்டுக்குச் சென்றது.

2-வது முறையாக

பெனால்டி வாய்ப்பில் பிஎஸ்ஜி அணி 4-3 என த்ரில் வெற்றி பெற்றது. ஆர்செனல் சார்பில் எபிரேஸி, கேப்ரியல் மகல்ஹேஸ் கோல் அடிக்க தவறினார்கள். பிஎஸ்ஜி சார்பில் நுனோ மெண்டிஸ் கோல் அடிக்க தவறினார்.

இந்தப் போட்டியில் 72 சதவிகிதம் பந்தை தன்வசம் வைத்திருந்த பிஎஸ்ஜி அணி இலக்கை நோக்கி 4 முறை கோல் அடிக்க முயன்றது. டிபென்ஸில் பலம்வாய்ந்த ஆர்செனல் அணி சிறப்பாகவே தடுத்து வந்தது.

சாம்பியன்ஸ் லீக்கின் மன்னன் ரியல் மாட்ரிட் அணிக்குப் பிறகு பிஎஸ்ஜி அணி தொடர்ச்சியாக 2-வது முறையாக கோப்பையை வென்றுள்ளது.

இந்தநிலையில், செம்பியன்ஸ் லீக் இறுதிப் போட்டியில் ஆர்சனலுக்கு எதிரான ஆட்டத்தில் பாரிஸ் செயிண்ட்-ஜெர்மைன் (PSG) வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, கொண்டாட்டக்காரர்கள், ரசிகர்கள் விளையாட்டு மைதானத்திலேயே பட்டாசுகள் வெடித்து கொண்டாடினர். வாகனங்களுக்கும் தீ வைத்து எரித்தனர். அப்போது ரசிகர்களுக்கும் போலீசாருக்கும் இடையே மோதல் வெடித்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

ரசிகர்கள் - போலீசார் மோதல்

பிரான்ஸ் முழுவதும் கால்பந்து ரசிகர்களுக்கும் காவல்துறைக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் 400-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. கொண்டாட்டத்தின்போது பட்டாசுகள் வெடிக்கப்பட்ட நிலையில், இந்த மோதலில் பல காவல்துறை அதிகாரிகள் காயமடைந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் தலைநகர் பாரீசில் கலவரங்களை கட்டுப்படுத்த ஆயிரக்கணக்கான போலீசார் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். போராட்ட வன்முறையால் பஸ் போக்குவரத்து, ரெயில் போக்குவரத்து சேவை பாதிக்கப்பட்டுள்ளது.

சாலையில் வாகனங்களை தீ வைத்துக் கொளுத்தியதால் பதற்றம் நிலவும் சூழலில், டெஸ்லா நிறுவன தலைவர் எலான் மஸ்க் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com