பிரான்ஸ் அதிபரின் மெழுகு சிலை திருட்டு

கிரெவின் அருங்காட்சியகத்தில் பிரான்ஸ் அதிபர் மேக்ரானின் மெழுகு சிலை வைக்கப்பட்டு இருந்தது.
பிரான்ஸ் அதிபரின் மெழுகு சிலை திருட்டு
Published on

பாரீஸ்,

உக்ரைன் மீது ரஷியா தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது. இதனிடையே, ரஷியாவுடன் பிரான்ஸ் பொருளாதார உறவைக் கண்டித்து கிரீன்பீல் என்ற அமைப்பின் ஆதரவாளர்கள் போராட்டத்தை நடத்தி வருகின்றனர். மேலும், ரஷியாவுடன் அணுசக்தி ஒப்பந்தத்தை முழுமையாக துண்டிக்காத பிரான்ஸ் அதிபர் இமானுவல் மேக்ரானுக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

இதன் ஒரு பகுதியாக, கிரெவின் அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டிருந்த பிரான்ஸ் அதிபர் மேக்ரானின் மெழுகு சிலையை போராட்டக்காரர்கள் திருடிச் சென்றதாக கூறப்பட்டது. இதன் மதிப்பு ரூ.40 லட்சமாகும். இது குறித்து தகவல் அறிந்து சென்ற போலீசார், சிலையை மீட்டு மீண்டும் அருங்காட்சியகத்திடம் ஒப்படைத்தனர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com