

இந்த விவகாரம் உலக முழுவதும் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது.பெகாசஸ் மூலம் மொராக்கோ நாட்டின் பாதுகாப்பு படைகள் பிரான்ஸ் அதிபர் மேக்ரானை உளவு பார்த்ததாக செய்திகள்
வெளியாகியுள்ளன. ஆனால் மொராக்கோ நாட்டு அரசு இதனை மறுத்துள்ளது. அதேபோல், என்.எஸ்.ஒ. நிறுவனமும் இதுகுறித்து வெளியான செய்திக்கு மறுப்பு தெரிவித்துள்ளது. இந்த நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக பிரான்ஸ் அதிபர் மேக்ரான் இஸ்ரேல் பிரதமர் நப்தலி பென்னட்டை தொலைபேசியில் தொடர்புகொண்டு பேசினார்.
இது குறித்து இஸ்ரேல் அரசு ஊடகம் வெளியிட்ட செய்தி குறிப்பில் இந்த பிரச்சினை தீவிரமாக எடுத்து கொள்ளப்பட்டது என்பதை உறுதி செய்யும்படி மேக்ரான், பென்னட்டிடம் வலியுறுத்தினார். அதற்கு, இந்த குற்றச்சாட்டுகள் தான் பதவியேற்பதற்கு முன்பாக வந்தவை என கூறிய பென்னட் எனினும் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு, இந்த பிரச்சினைக்கு தீர்வு காணப்படும் என உறுதியளித்தார் என்று கூறப்பட்டுள்ளது.