மஸ்கட்டில் இருந்து சென்னை, திருச்சி உள்ளிட்ட நகரங்களுக்கு அடுத்த மாதம் 1-ந் தேதி முதல் 45 விமானங்கள் இயக்கப்படுகிறது

மஸ்கட்டில் இருந்து சென்னை, திருச்சி உள்ளிட்ட நகரங்களுக்கு அடுத்த மாதம் 1-ந் தேதி முதல் 45 விமானங்கள் இயக்கப்படுகிறது என்று ஓமன் இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது.
மஸ்கட்டில் இருந்து சென்னை, திருச்சி உள்ளிட்ட நகரங்களுக்கு அடுத்த மாதம் 1-ந் தேதி முதல் 45 விமானங்கள் இயக்கப்படுகிறது
Published on

மஸ்கட்,

ஓமன் இந்திய தூதரகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:-

ஓமன் நாட்டில் இருந்து இந்தியர்கள் சொந்த ஊருக்கு செல்லும் வகையில் வந்தே பாரத் திட்டத்தின் கீழ் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானங்கள் இயக்கப்பட்டு வருகிறது.

இந்த திட்டத்தின் கீழ் அடுத்த மாதம் (அக்டோபர்) 1-ந் தேதி முதல் 24-ந் தேதி வரை 45 விமானங்கள் இயக்கப்பட இருக்கிறது. இதில் சென்னைக்கு அடுத்த மாதம் 3, 6, 10, 13, 17, 20 மற்றும் 24 ஆகிய தேதிகளிலும், திருச்சிக்கு 7, 14 மற்றும் 21 ஆகிய தேதிகளிலும் விமான சேவைகள் இயக்கப்படுகிறது. இதுமட்டுமல்லாமல் மும்பை, டெல்லி, கொச்சி, பெங்களூரு, ஐதரபாத், கோழிக்கோடு, லக்னோ உள்ளிட்ட பல்வேறு நகரங்களுக்கும் இந்த விமான சேவைகள் இயக்கப்படுகிறது.

இந்த விமானங்களில் அவசர மருத்துவ சேவைக்காக பயணம் செய்ய இருப்பவர்கள், கர்ப்பிணி பெண்கள், வேலையிழந்த தொழிலாளர்கள், வயதானவர்கள், பிரச்சினைக்கு ஆளானவர்கள் ஆகியவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.

இவ்வாறு அந்த செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com