ஏமாற்றி விட்டு வேறொரு பெண்ணுடன் சுற்றுலா செல்ல இருந்த கணவனை விமான நிலையத்தில் பிடித்த பெண்

கொலம்பியாவில் வேறொரு பெண்ணுடன் இன்ப சுற்றுலா செல்ல திட்டமிருந்த கணவனை, அவரின் மனைவி விமான நிலையத்தில் கையும் களவுமாக பிடித்துள்ளார்.
ஏமாற்றி விட்டு வேறொரு பெண்ணுடன் சுற்றுலா செல்ல இருந்த கணவனை விமான நிலையத்தில் பிடித்த பெண்
Published on

கொலாம்பியாவின் ஜோஸ் மரிய கர்டோவா சர்வதேச விமான நிலையத்தில், ஒரு ஜோடி கார்டஜினா என்ற இடத்திற்கு இன்பச் சுற்றுலா செல்வதற்காக சென்றுள்ளனர். அப்போது திடீரென அங்கு வந்த பெண் ஒருவர், அந்த ஜோடியுடன் சண்டை போடு உள்ளார். நின்று கொண்டிருந்த பெண்ணின் தலைமுடியை பிடித்து இழுத்து சண்டை போட்டுள்ளார்.

அப்போது அவருடன் இருந்த நபர் தடுக்க முயற்சி செய்ய, சனிக்கிழமையன்று நான், இன்று இவளா என்று கடும் ஆத்திரத்துடன் சண்டை போட்டுள்ளார். ஏனெனில் சண்டை போட்ட பெண் தான் அவரின் மனைவி, உன்னை சிறையில் அடைக்காமல் விடமாட்டேன் என்று தொடர்ந்து முடியை பிடித்து இழுத்து சண்டை போட்டுள்ளார்.

கணவர் எவ்வளவோ சமாதானப்படுத்தியும் அவர் விடுவதாக தெரியவில்லை, இந்த வீடியோ வேறொரு பயணி எடுத்து வெளியிட வைரலாகியுள்ளது. விமானநிலையத்தில் நடந்த இப்பிரச்சனையால் போலீசார் வந்தனரா? அதிகாரிகள் யாரும் தலையிட்டார்களா? என்பது குறித்து தெரியவரவில்லை.

வீடியோ பாருங்கள்

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com