உலக பொருளாதாரத்தை பலதரப்பட்ட பங்குதாரர்களை கொண்டதாக மாற்ற வேண்டும் - மத்திய மந்திரி ஜெய்சங்கர்

வினியோக சங்கிலிகளை பாதுகாப்பது உலக பொருளாதாரத்தின் நலனுக்கு முக்கியமானது என்று ஜெய்சங்கர் கூறினார்.
மத்திய மந்திரி ஜெய்சங்கர்
Published on: 

அட்லாண்டா,

உலக பொருளாதாரத்தை பலதரப்பட்ட பங்குதாரர்களை கொண்டதாக மாற்ற வேண்டும் என்று ஜி-20 நாடுகளின் வெளியுறவு மந்திரிகள் கூட்டத்தில் மத்திய மந்திரி ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.

அச்சுறுத்தல்

அமெரிக்காவின் அட்லாண்டா நகரில் ஜி-20 நாடுகளின் வெளியுறவு மந்திரிகள் கூட்டம் நடந்தது. அதன் நிறைவு நிகழ்ச்சியில், மத்திய வெளியுறவு மந்திரி ஜெய்சங்கர் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

பெருந்தொற்றுகள், போர்கள், பருவநிலை மாற்றங்கள், விபத்துகள் ஆகியவற்றால் வினியோக சங்கிலிகளுக்கு அச்சுறுத்தல் ஏற்படுகிறது. அந்த அச்சுறுத்தலை போக்கி, வினியோக சங்கிலிகளின் மீள்திறனுக்கு பல்வகைப்படுத்தலும், ஆபத்து தணிப்பும் முக்கியமானது.

உலக பொருளாதாரம்

வினியோக சங்கிலிகளை பாதுகாப்பதும், அவற்றின் மீள்திறனை உறுதி செய்வதும் உலக பொருளாதாரத்தின் நலனுக்கு முக்கியம். தொழில்மயமாக்கும் உரிமை ஊக்குவிக்கப்பட வேண்டும். கொள்ளையடிக்கும் நடைமுறைகளும், போட்டியை குறிவைப்பதும் உறுதியாக எதிர்க்கப்பட வேண்டும்.

உலகப் பொருளாதாரத்தில் பரவலாக்கத்தை குறைப்பது, புவியியல் ரீதியாக உற்பத்தியை மேம்படுத்துவது ஆகியவை மூலம் நிதி, வளங்கள், உற்பத்தி மற்றும் சந்தைப்பங்கு ஆகிய வற்றை ஆயுதமாக்குவதைத் தடுக்க முடியும்.

அரசியல்மயம் கூடாது

ஜி-20 சந்தைகளை அரசியல்மயமற்றதாக்க பாடுபட வேண்டும். வெளிப்படையான மற்றும் பலதரப்பட்ட வினியோக சங்கிலிகளை ஊக்குவிப்பதன் மூலம், ஜி-20 நாடுகள் கூட்டு நலனுக்காக தங்கள் தேசிய நலன்களை ஒருசேரக் கடைப்பிடிக்க வேண்டும். இதன்மூலம் உலக பொருளாதாரத்தை உண்மையாகவே பலதரப்பட்ட பங்குதாரர்களை கொண்டதாக மாற்ற வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

X