

பிரசல்ஸ்,
பெல்ஜியம் தலைநகர் பிரசல்ஸ் நகரில் ஜி-7 நாடுகளின் தலைவர்கள் கூட்டம் நடைபெற்றது. இதில் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன், இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் மற்றும் கனடா, பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, ஜப்பான் நாடுகளின் தலைவர்களும் கலந்து கொண்டனர்.
இந்த கூட்டத்தில் பங்கேற்ற தலைவர்கள் உக்ரைன் மீது போர் தொடுத்துள்ள ரஷியாவின் மத்திய வங்கி பரிமாற்றங்களில் தங்கத்தை பயன்படுத்துவதை கட்டுப்படுத்துவதாக அறிவித்துள்ளனர்.
ரஷிய மத்திய வங்கி 130 பில்லியன் டாலர் (சுமார் ரூ.9.75 லட்சம் கோடி) மதிப்புள்ள தங்கத்தை இருப்பாக வைத்துள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. மேலும் ரஷிய அரசுக்கு சொந்தமான 48 பாதுகாப்பு நிறுவனங்கள், 328 எம்.பி.க்கள், டஜன் கணக்கிலான ரஷிய நிறுவனங்கள் மீது அமெரிக்கா புதிய பொருளாதார தடைகளை அறிவித்துள்ளது.